ஈழத்தைச் சார்ந்த ஆய்வாளரும், யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழீழம், புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச அரசியலை தொடர்ந்து ஆய்ந்துவருபவரும், உலக வரலாற்று-அரசியல் அறிவியலை ஆய்வு செய்வதை தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருப்பவரும், பல அரசியல்-வரலாற்று நூல்களின் ஆசிரியருமான திரு. மு.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைகள், உரைகள், காணொலிகள் இத்தளத்தில் இடம்பெறுகின்றன.
சமீபத்தில் ஈழத் தமிழருக்கிடையேயான ஒற்றுமையின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஸ்விஸ் நாடு முயல்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் தூதுவர் இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
உண்மையில் எங்கோ இருக்கும் ஸ்விஸ் நாடு இலங்கையில் உள்ள ஈழப் பிரச்சனையை அனுக வேண்டிய காரணம் என்ன. இதனால் ஈழத்தமிழருக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார் வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
ஊடறுப்பு தளத்தின் நெறியாளர் தமிழரசுவுக்கு தந்த நேர்காணலில் இலங்கை அரசின் இந்த புதிய நகர்வு குறித்தும், ஈழப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் மு.திருநாவுக்கரசு அவர்கள் அளித்த நேர்காணல் கீழே..
நேர்காணல் காணொளி:
ஊடறுப்பு தளத்திற்கு வழங்கப்பட்ட இந்த நேர்காணல் காணொளியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் கூறியுள்ள முக்கிய கருத்துக்கள் சிலவற்றின் வரிச் சுருக்கம் கீழே..
இலங்கையை ஆண்ட ஆளும் அரசுகள் எதுவாக இருந்தாலும் (இடதுசாரி போல நடிக்கும் அநுராவாக இருந்தாலும்) ஈழப் பிரச்சனைக்கு சமாதானத் தீர்வு காண்பதை ஒரு போதும் செய்யமாட்டார்கள். தங்கள் அரசுகளுக்கு அப்போது ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க தீர்வுகளாக எதையாவது பேசுவார்கள் செய்வார்களே தவிர நீண்ட கால சமாதானத் தீர்வு அவர்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததே இல்லை. இருக்காது.
கடல்சார் கொள்கை என்பது இல்லையென்றால் ஈழத்தமிழருக்கு இலங்கையில் வாழ்வே இல்லை. பாக் நீரிணைப்பு தான் அவர்களது பலம். அதைத் தான் சிங்கள அரசுகள் தங்களது பலவீனமாக , இந்தியாவின் ஆக்கிரமிப்பு நடக்கப் போகும் பகுதியாக தொடர்ந்து கருதி வருகிறார்கள். இதுவரை தமிழர் சம்பந்தமாக இலங்கை அரசுடன் செய்யப்பட்ட எந்த ஒப்பந்தங்களிலும் பாக் நீரிணை கடலின் உரிமையில் ஈழதமிழருக்கும் பங்கு என்கிற பேச்சே எழவிடவில்லை சிங்கள அரசுகள். அந்தக் கடல் பகுதி எப்போதுமே இலங்கை அரசிற்கு சொந்தமானதாகவே கொள்ளப்பட்டது. அந்தக் கடல்பகுதியை, அதன் அதிகாரத்தை ஈழத் தமிழருக்கோ, இந்தியாவுக்கோ ஒரு போதும் இலங்கை அரசு விட்டுத் தராது. பாக் நீரிணை என்பது சோழப் பேரரசின் காலத்திலிருந்தே இந்தியாவுக்கு பலமாக இருந்துள்ளது. இப்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் பாக் நீரிணை இல்லை.
இலங்கை அரசு, ஈழத் தமிழர் மற்றும் இந்தியா இந்த மூன்றும் சந்திக்கும் ஒரு புள்ளியில் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு மையம் கொள்ள முடியும். இந்தியாவால் மட்டும் சர்வதேச அளவில் இப்பிரச்சனையை தீர்த்துவிட முடியாது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களை இலங்கைக்குள் இறக்க முடிந்தாலும் இந்தியாவால் பிரச்சனையை தீர்த்துவிட முடியவில்லை. முடியாது. அதற்கு இன்னொரு பலமான வெளி அரசின் ஆதரவு இந்தியாவிற்கு தேவைப்படும். அது வீட்டோ அதிகாரமுள்ள அமெரிக்கா அல்லது ரஷ்யாவாக இருக்கமுடியும். உலகில் உள்ள வேறு எந்த நாடும் இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காணவோ, பேச்சு நடத்தவோ முயலாது.
நார்வே, ஸ்விஸ் போன்றவை அமெரிக்காவின் நிழல்தள நாடுகளாக இருப்பதன் பின்னணியில், ஈழப்பிரச்சனைக்குள் தலையிட அனுமதிக்கப்படுவது ்தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. ஆனால் அவற்றால் ஈழத்தமிழருக்கு பலனில்லை. அவற்றால் தீர்வும் காண முடியாது. ஆனால் ஸ்விஸ் நாட்டிலுள்ள கேன்டன்ஸ்(cantons) எனப்படும் நாடுகளற்ற நிலையை நைசாக ஈழத் தமிழர் பகுதிகளுககான தாயகமற்ற, நாடற்ற தீர்வாக திணிக்க அது சிங்களருக்கு உதவலாம்.
கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ரஷ்யா இந்தியா இடையே இணக்கமான உறவே இருந்து வந்திருக்கிறது. ரஷ்யாவிலிருந்து எந்தவித படையெடுப்புகளோ, படையெடுப்புக்கான ஆயத்தங்களோ கூட இந்தியாவை நோக்கி நிகழ்ந்ததில்லை. உக்ரைன் போரில் இந்தியா ரஷ்யாவை கண்டிக்கவில்லை. மனிதநேய உதவிகள் பற்றிப் பேசியதே தவிர ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. பங்களாதேஷ் பிரிவினையின் போது ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவை எதிர்த்து நின்றது. 1998ல் இந்தியா அணு ஆயுதம் தயாரித்த போது பொருளாதார தடையை எதிர் கொண்டது. அப்போதும் ரஷ்யா இந்தியாவை கண்டித்ததோடு நின்று கொண்டது, பொருளாதாரத் தடைகள் எதுவும் இந்தியா மீது விதிக்கவில்லை.
ஈழப் பிரச்சனையை சிங்களர்கள் தமிழின அழிப்பு, இந்திய எதிர்ப்பு என்கிற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே பார்க்கிறார்கள். இந்திய எதிர்ப்பை பலப்படுத்த ஒரே வழி இலங்கையில் தமிழினத்தை அழிப்பதுவே. இதுவே சிங்களர்களின் இந்திய ஆதிக்க எதிர்ப்பு வாதமுமாகும்.
2024ல் அப்போதைய நெருக்கடியை சமாளித்து இந்தியாவிடமிருந்து சில பலன்களைப் பெற பிரதமர் ரணில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடற்பாலம் கட்டப்படும் என்கிற ஒப்பந்தத்தை செய்தார். தற்போதைய ஜனாதிபதி அநுரா அதை இந்தியாவின் விஸ்தரிப்பு வாதமாக பார்ப்பதோடு, பாலம் கட்டப்படும் வாய்ப்பு இல்லை என்றும் நிராகரித்துவிட்டார். அநுரா தொழிலாளர்களோடும், ஈழத் தமிழர் பகுதிகளில் வந்து செல்ப்பி எடுத்ததோடும் விளம்பரமாகச் செய்து தன்னை முற்போக்காக காட்டிக் கொள்ளமட்டுமே செய்திருக்கிறார். தொழிலாளர்களின் தோழர் என்று படம் காண்பித்தலே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. நிஜத்தில் ஈழத்தமிழருக்கு அவராலும் எந்த நன்மையும் இல்லை. இன்றும் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இருக்கின்றன. தமிழர் பகுதி முழுவதும் ராணுவம் நின்று கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழர் பகுதிகள் என்பதே இல்லை என்பதாக ஆக்கிவிடுவதே அநுரா குமாரவின் குறிக்கோளாகவும் இருக்கிறது.
30 ஆண்டுகளான ஈழப் போராட்டத்தில் ஈழத்தில் உள்ள பெரும் அறிவுஜீவிகள், தலைமைகள், தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். பிறர் இடம் பெயர்ந்து விட்டனர். பலர் விரக்தியில் அரசியலை விட்டே விலகிப் போய்விட்டனர். இன்றைய நிலையில் ஈழத்தில் தமிழருக்கு வலுவான ஒன்றுபட்ட அரசியல் தலைமைகளை இல்லாமல் அனைத்தும் சீரழிந்து நிற்கிறது.
இலங்கை அரசியல் யாப்பின் முக்கிய தூண்கள் மகாசங்கம், ராணுவம் மற்றும் ராணுவவாதம். இவையே அதன் இனவெறியை நியாயப்படுத்தி அதை நோக்கி செயல்பட துணை நிற்கின்றன. எனவே ஜனாதிபதி முறையை இலங்கை அரசால் கைவிட இயலாது. யாப்பை மாற்ற இயலாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை கைவிட நினைத்தால் இந்தியா இலங்கையை விடாது. இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு 13ஆவது திருத்தச் சட்டம் மட்டுமே. வேறு எதிலும் இந்தியாவை நம்பி இலங்கை இல்லை. (சீனா நேரடியாக ஈழப் பிரச்சனையில் தலையிடாது. ஆனால் இலங்கையின் வர்த்தக கூட்டாளி என்கிற அடிப்படையில் அனைத்து வகையான உதவிகளையும் இலங்கைக்கு தந்து ஆதரவாக நிற்கும்)
லங்கா ஸ்ரீ பத்திரிக்கையின் ஊடறுப்பு நிகழ்வில், ஈழத்தைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் திரு மு.திருநாவுக்கரசு அவர்கள், நெறியாளர் தமிழரசுவுக்கு, 31-01-2026 அன்று வழங்கிய நேர்காணல்.
லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் முதல் பகுதி:
லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் இரண்டாம் பகுதி:
இந்த நேர்காணல்களில் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள் சில சுருக்கமாக கீழே...
- இந்த 2026ல் உலக ஒழுங்கு குலைந்திருக்கிறது. ஆனால் புதிய உலக ஒழுங்கு இன்னும் உருவாகவில்லை.
- America First என்கிற அமெரிக்காவின் தன்னை முன்னிலைப்படுத்தும் கருதுகோள் சிக்கலுக்கு உள்ளாகிறது.
- இந்த சீர்குலையும் உலக ஒழுங்கு சூழலில், இரு பெரும் நாடுகள் அல்லது நாட்டு அணிகளுக்கு இடையிலான பெரும்போர் தான் புதிய உலக ஒழுங்கை உருவாக்கக் கூடிய பலத்தை அப்போரில் வெற்றி பெறும் நாட்டிற்கு அல்லது வெற்றி பெறும் அணிக்கு வழங்கும். ஆனால் இத்தகைய சூழல் நடக்காததால் உலக ஒழுங்கை அமெரிக்காவால் மாற்ற முடியாது.
- சீர்குலையும் உலக ஒழுங்கில் சந்தைக்கான போட்டியில் அமெரிக்காவிற்கு சவாலாக இருப்பது சீனாவே. அமெரிக்கா ஏகாதிபத்தியம் கம்பெனிகளின் monoploy ஆக இருக்கிறது. சீனா அரசு சார்ந்த(state sponsored), சந்தை ஏகாதிபத்தியமாக, monoopoly ஆக இருக்கிறது. எனவே சீனாவின் பலம் அதிகமாக இருக்கும்.
- சீனா கடந்த 25 ஆணடுகளாக தொழில்நுட்பத்தை மேற்குலகிடமிருந்து பெற்றுக் கொள்ள தனது சந்தையை திறந்து விட்டது சீனா மற்றும் ரஷ்யா. சீனா உலக தொழில்நுட்பம் அனைத்தையும் பெற்று இன்று மிதமிஞ்சிய வளர்ச்சியடைந்து விட்டது.
- 45 வருட தொழில்நுட்பமயமாக்கப்பட்ட உற்பத்தியால், மாசுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலால் ஆர்க்டிக் கடல் உருகுகிறது. அது புதிய எளிதான கடல்வழிப்பாதையை உலக வர்த்தகத்திற்கு ஏற்படுத்துகிறது. இதைப் பயன்படுத்தி சீனா தனது உற்பத்திப் பொருட்களை மேற்குலகம், கனடா மற்றும் உலகநாடுகள் அனைத்திற்கும் கொண்டு செல்வது இன்னும் எளிதாகிறது. எனவே தான் இந்தப் பாதையில் இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயல்கிறது. சீனாவின் எளிய கடல்வழிப் பாதையை தனது கட்டுக்குள் வைக்க முயல்கிறது.
- முதலாம் , இரண்டாம் உலகப் போர்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையேயான போர்கள் அல்ல. வளர்ச்சியடைந்த முதலாளிகளிடையே நடந்த பன்னாட்டு சந்தைப் பிடிப்பின் போட்டியால் நடந்த போர்களே ஆகும். முதலாளி வர்க்கம் என்கிற ஒரே வர்க்கத்துக்குள்ளேயே நடந்த முரண்களே இந்தப் போர்கள் ஆகும்.
- அமெரிக்கா ஈரானுடன் நேரடியாக போரில் இறங்கும் வாய்ப்பு குறைவு. ஈரான் மேல தாக்குதல்கள் செய்யலாம். தலைவர்களை கொல்லலாம். உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால் நேரடியாக போரில் இறங்குவது சரியான அமெரிக்காவின் முடிவல்ல. தேவையுமல்ல.
- இன்றைய உலக ஏகாதிபத்திய சந்தைப் போட்டியில் கிரீன்லாந்து, வெனிசூலா மற்றும் இலங்கை ஆகிய போட்டிக்கான குவிமையங்கள் உள்ளன.
- தந்தை செல்வா காலம் முதலே தமிழர்கள் சுயாட்சி என்பதை அடைய முடியாமலே சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தொடர்ந்து தோல்வியடைந்தே வந்துள்ளனர். ஒரு தலைவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியலை வெற்றிகரமாக புரிந்து உலக அரசியலை செய்ததில்லை.
- பாக் நீரிணை தமிழரின் கட்டுப்பாட்டில் இருந்தவரை ஈழப் போராட்டம் வென்றது. பாக் நீரிணை தமிழரை விட்டுப் போனபின்பு ஈழப் போராட்டம் எளிதில் அழிக்கப்பட்டது.
- இந்திராகாந்தி காலத்தில் 1984ல் இந்திரா-பார்த்தசாரதி தீர்வு ஒன்று திட்டமிடப்பட்டது. கிரேக்க-துருக்கி தீர்வு போல, ஒரு நாடு - இரு அரசுகள் என்கிற அமைப்பை உருவாக்க தமிழர் பகுதியில் படையை இறக்கி இந்தியப் படை தமிழர் பகுதியை ஆளும் என்றும், சிங்களர் பகுதியை சிங்களர் ஆளட்டும் என்றும் திட்டமிடப்பட்டது. அது நிறைவேற்றப்படுவதற்குள் இந்திராகாந்தி கொல்லப்பட்டார்.
1983 ல் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, ஈழத்தமிழர் மீது நடத்தப்பட்ட யூலைக் கலவரம், படுகொலைகள் சம்பந்தமாக, இதுவரை வெளிவந்திராத புதிய தகவல்கள்.
வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள், யூலைப் படுகொலைகளின் நினைவு தினத்தையொட்டி, லங்காஸ்ரீ செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்
20-07-2025
மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய நேர்காணலின் காணெலி, யூட்யூப் வலைத்தளத்தில் பார்க்க. இணைப்பு கீழே.
காணொலியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் சில கீழே..
1983 ல் இலங்கையில் நடந்த கறுப்பு யூலை படுகொலைகள் சிங்களரால் தமிழர் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் இனியும் சிங்களருடன் தமிழர் இணைந்து சமமாக , சம உரிமைகளோடு வாழ்தல் சாத்தியமற்றது என்பதை நிரூபித்தது.
இப்படுகொலைகளுக்கு ஆதாரமாக இருந்தது அந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றை எடுத்தவர்கள் சிங்கள கொம்யூனிஸ்ட் கட்சியினர். அக்கட்சியின் செயலாளர் கீர்த்தி பாலசூர்யாவின் தலைமையில் இருந்த தோழர்கள் அப்புகைப்படங்களை எடுத்து தோழர் மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு அனுப்ப, அவர் மூலமாக அவை பிரபாகரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
கீர்த்தி பாலசூர்யா எடுத்து அனுப்பிய அந்த 14 கறுப்பு வெள்ளை புகைப்படங்களை பேபி சுப்ரமணியம் அவர்கள் தமிழ்நாட்டில் கறுப்பு யூலை படுகொலை தொடர்பான கண்காட்சியில் காட்சிப் படுத்தினார். அதன் பின்பே அவை உலகெங்கும் பரவி கறுப்பு யூலைப் படுகொலைகளின் சாட்சியமாக மாறி நின்றன.
காலனி எதிர்ப்புப் போராட்டம் என்பது காலனி அரசை எதிர்த்து விடுதலை கோரிய போராட்டம். அவை நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் ஒடுக்கும் அரசு அந்நிய நாட்டு அரசு. அது என்றாவது ஒரு நாள் வெளியேறியே ஆக வேண்டும் என்பது விதி.
ஆனால் தேசிய இனப் போராட்டங்கள் உள்நாட்டில் உள்ள இனங்களுக்கிடையே நிகழ்பவை. தேசிய இனப் போராட்டம் நிகழ, நாட்டிற்கு வெளிய ஒரு பலமான அரசு ஆதரவாக இருக்க வேண்டும். இது ஒரு தேவை.
அப்படி ஒரு ஆதரவாக இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழருக்கு இருந்தன. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழ்நாட்டில் தளம் அமைத்து இயங்கியவரை தான் வெற்றி பெற்றது. அது பாக் நீரிணைப்பில் தனது கட்டுப்பாட்டை இழந்த பின்பு, தமிழ்நாட்டின், இந்திய அரசின் ஆதரவை இழந்த பின்பு அது படிப்படியாக பலமிழந்து கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனது.
உலகில் ஒடுக்கப்பட்ட இனங்கள் விடுதலையடைந்தது, விடுதலையடைந்திருப்பது, இனியும் விடுதலையடைவதானது, ஒரு பலம் பொருந்திய வெளி அரசின் உறுதியான ஆதரவு இல்லாமல் சாத்தியமே இல்லை என்பது வரலாற்று உண்மை.
ஈழத் தமிழர் இனம் சிறிய எண்ணிக்கையிலானது, இலங்கையில் அதன் விடுதலைப் பரப்பும் சிறியது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஈழப் போராட்டம் நடந்தால் அது தோல்வியுறும் என்று 1980 லேயே கணித்துச் சொல்லியிருக்கிறார் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள். 20 வருடங்களுக்கும் மேலாக ஈழப் போராட்டம் இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் ஆதரவுத் தளத்தை இழந்தாலும் ஈழப் போராட்டம் இலங்கை மண்ணில் தோல்வியுறும் என்றும் கணித்துக் கூறினார். அப்படி தமிழ்நாட்டின் ஆதரவுத் தளத்தை இழக்க வைக்க சிங்களர் செய்த சாணக்கியத் தந்திரங்கள் ஈழப் போராட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து தனிமைப் படுத்தின.
முள்ளிவாய்க்காலுக்குப் பின் விடுதலைக்கான நம்பிக்கைகள் அனைத்தும் முடிந்து போயின என்றாலும் இனப்படுகொலை, அதற்கான பதில் என்ன, யார் பொறுப்பு, யார் தீர்வு, யார் குற்றவாளி என்கிற கேள்விகளை உலகம் முழுவதும் மக்களிடம் எழுப்புவதன் மூலம் அந்த அரசுகளையும் தமிழினப் படுகொலைக்கான நியாயத்தை நோக்கி ஈர்க்கமுடியும். இனப்படுகொலையே , அதற்கான நியாயத்தை எழுப்பி ஜனநாயக ரீதியாக உலகெங்கும் போராடுவதே ஈழத்தமிழரின் விடுதலைக்கான புதிய ஆயுதமாக இருக்கிறது.
ஈழத்திற்கு சைப்ரஸ் தீவுகள் பாணியிலான தீர்வு ஒன்றை இந்திராகாந்தி - பார்த்தசாரதி வைத்திருந்தார்கள். அதன்படி இந்திய ராணுவம் இலங்கையின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் இறங்கி சிங்களரை விரட்டியடிக்கும். பின்பு தனது படையை அங்கேயே வைத்திருந்து தமிழர்களை பாதுகாக்கும். தமிழருக்கான உரிமைகளை சிங்கள அரசு வழங்க ஆரம்பித்த பின் சில ஆண்டுகளில் படிப்படியாக இந்திய ராணுவம் அப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும்.
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
ஐக்கிய நாடுகள் சபை அரசுகளுக்கானதே, அரசுகளுக்கிடையே நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கவே உருவாக்கப்பட்டதே அன்றி, அது உலகெங்கும் ஒடுக்கப்படும் இனங்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. அந்த சபையானது நாட்டு அரசுகளுக்கிடையான தகராறுகள், பிரச்சனைகளை தீர்க்க மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்க முன்வராது. முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் போய் ஒப்பாரி வைப்பதால் ஈழத்தமிழருக்கு எந்த தீர்வும் கிடைத்துவிடாது .
ஈழத் தமிழர்கள் தங்களுக்கான ஆதரவை உலக நாட்டு அரசுகளை கேட்பதை விட, உலக நாட்டு மக்களிடமிருந்தும், இந்திய அரசை கேட்பதை விட இந்திய மக்களிடமிருந்தும், தமிழ்நாட்டு அரசுகளை கேட்பதை விட தமிழ் மக்களிடமிருந்தும் முதலில் திரட்ட முனைந்தால், மக்களின் கவனத்தை ஈர்க்க முடிந்தால், இந்த அரசுகள் அனைத்தும் பின்னர் மெதுவாக ஈழத்தமிழருக்கு நியாயம் செய்ய தானே முயற்சி செய்யவேண்டிய தேவை வரும்.
2025 மார்ச் மாத ஆரம்பித்தில் முன்னாள் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலுக்குப் பிறகு, பட்டலந்தை முகாம் குறித்து அவர் கூறிய கருத்துக்களால், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்தும், பட்டலந்தை வதை முகாம் குறித்தும் நாட்டில் அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இதன் பின்னர் பட்டலந்தை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜேவிபி அரசாங்கத்தினால் நாடாளுமன்ற அவைத் தலைவர் பிமல் இரத்திநாயக்கவினால் 2025 மார்ச் 14 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளைக் கடுமையாக நிராகரித்து, அது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் ரீதியான முயற்சி என்று கூறினார். ஆணைக்குழு உருவாக்கப்பட்டது தன்னை இழிவுபடுத்தும் நோக்கத்தால் தூண்டப்பட்டது என்றும், ஆனால் இறுதியில் அந்த இலக்கை அடைய முடியவில்லை என்றும் வலியுறுத்தினார்.
1988-1990 கிளர்ச்சியின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வசதி செய்வதில் தனது பங்கை மட்டுமே அறிக்கை குறிப்பிடுவதாக விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார், இந்த செயல்பாடு நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
லங்கா ஸ்ரீ செய்தி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில், ஊடறுப்பு என்கிற தலைப்பில் நடந்த காணொலி உரையாடலில், சமீபத்தில் நிகழ்ந்த இந்த அரசியல் நிகழ்வுகளின் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்கேயின் பங்கு பற்றி, சிங்கள ஒடுக்குமுறையின் தீவிரமான விஷயங்களை பற்றி தெளிவாக்குகிறார் அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
அந்தக் காணொலி யூட்யூப் வலைத்தளத்தில் காணலாம். அதன் இணைப்பு கீழே.
02 March 2025 அன்று ஊடறுப்பு இணைய செய்தித் தளத்திற்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டியின் காணொலி.
இலங்கையில் அநுரா தலைமையிலான அரசு புதியதொரு யாப்பை கொண்டு வருவோம் என்று கடந்த தேர்தலின் போது அறிவித்திருந்தது.
அநுரா அரசு பதவியேற்றும் பெரும்பான்மை பெற்றிருந்தும் இன்னும் அதுபற்றிய நகர்வுகள் எதுவும் பெரிதாக எடுக்கப்படவில்லை.
அத்தகைய புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவாரா அநுர ? ஏன் புதிய யாப்பு பற்றிய பேச்சு எழுகிறது. புதிய யாப்பு தேவையா. புதிய யாப்பு கொண்டு வருவதின் உள்ளே பொதிந்துள்ள சிங்கள நலன்கள் என்ன. சீனாவின் நலன்கள் என்ன இருக்கின்றன. தமிழருக்கு புதிய யாப்பு வந்தால் எதுவும் விடிவு காலம் வருமா,
இது போன்ற பல்வேறு கேள்விகளைப் பற்றி ஆராய்ந்து வரலாற்று ரீதியான பதில்களை, தேடல்களை இக்காணொலியில் முன்வைக்கிறார் வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
பேட்டியின் காணொலி:
்இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்கள் கீழே குறிப்புகளாக தரப்பட்டுள்ளன.
இலங்கையில் புதிய யாப்பு கொண்டு வருவதாக அநுர அரசு சொன்னாலும் மகாசங்கமும், சிங்கள ராணுவம் அத்தகைய யோசனையை விரும்பவில்லை.
மகாசங்கத்தின் நோக்கம் மாகாண சபை அமைப்புக்களை நீக்க வேண்டும் என்பதும், முஸ்லீம்கள் விகிதாச்சார முறைப்படி அதிக சீட்டுக்களைப் பெறுவதை தடுக்க வேண்டும் என்பதுமே.
ஜனாதிபதி முறை அரசுக்கும் , ராணுவத்துக்கும் மிகுந்த அதிகாரம் தருவதால் ஜனாதிபதி முறையை ஒழிக்க இருவருமே விரும்பவில்லை.
அநுர அரசு பெரும்பான்மை இருப்பதால் உண்மையிலேயே புதிய யாப்பு உருவாக்குவதில் அக்கறை இல்லை. தேர்தலுக்காக சொல்லப்பட்டதே அது.
இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே பிடி மாகாண சபை அமைப்புகள் தான். அதை நீக்கினால் இந்தியா தீவிரமாகும் என்பதால் அதை நீக்காமலே டம்மியாக வைத்திருந்து மேலும் அதை பலனற்ற ஒரு அமைப்பாக நீர்த்துப் போகச் செய்யவே முயலுவார்கள்.
இப்படியான சிந்தனை சீனாவிடமிருந்து தான் இலங்கை அரசுக்கு தரப்படுகிறது. சீனா தேசிய இனங்களின் உரிமைகளை எப்போதுமே சமமாக மதித்ததில்லை. தனது நாட்டிலேயே அது அவர்களை சீன கட்சிக்கு கட்டுப்பட்ட சில உரிமைகளை கெஞ்சி கேட்டுக்கொள்ளும் அளவிலேயே தான் வைத்திருக்கிறது. அதையே இலங்கையிலும் சிறுபான்மை தேசிய இனங்கள் மேலும் பயன்படுத்த சிங்கள அரசுக்கு சீனா ஆலோசனையும் உதவியும் செய்கிறது.
1984 இந்தியா இலங்கை ஒப்பந்தம், பார்த்தசாரதியால் துருக்கி-கிரேக்கம்-சைப்ரஸ் ஸ்டைல் தீர்வை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டது. துருக்கி ராணுவம் கிரேக்கத்தில் உள்ள 20 சதவீத துருக்கியரை கிரேக்கர்கள் துன்புறுத்துவதை படுகொலை செய்வதை தடுக்கும் விதமாக கிரேக்கத்தில் இறங்கி துருக்கியரை பாதுகாத்தது. இன்றுவரை அந்த ராணுவம் கிரேக்கத்தில் இருக்கிறது. இந்திராகாந்தி படுகொலைக்குப் பின்பு அனைத்தும் மாற்றப்பட்டு தலைகீழாக யோசிப்பவர்கள் அங்கே வந்ததால் அது கைவிடப்பட்டுவிட்டது.
இந்திய கொள்கை வகுப்பாளர்கள் யாரிடமும் தற்போது இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு தமிழர்களை காப்பது என்பதே கிடையாது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் கடல் பகுதி சார்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இல்லை. நேரு - பணிக்கர் காலத்தில் துவங்கி அவ்வாறு தான் இருந்தது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் கொண்ட கடல்சார் வெளியுறவுக் கொள்கைகளே இந்தியாவுக்கு தேவையான வெளியுறவுக் கொள்கையின் முன்மாதிரியாகும். ஆனால் இன்றுவரை அதுபற்றி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவே இல்லை.
ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவிட்டால் பாக் நீரிணை சீனாவின் வசமாகிவிடும். அப்படி நிகழும்போது அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்தியாவை இரண்டு மூன்று துண்டுகளாக உடைக்கும் நகர்வுகளை சீனாவால் நிறைவேற்ற முடியும்.
22,பிப்ரவரி, 2025 அன்று ஊடறுப்பு ஊடகத்திற்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டி.
இலங்கையில் சமீபத்தில் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சஞ்சீவா குமர சமரத்னே என்கிற பாதாள உலகின் தலைவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னாலுள்ள பாதாள உலக கும்பலின் பின்னணி, அதன் அரசியல், சமூக காரணங்களை விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
இலங்கையில் பாதாள உலகை வளர்த்துவிட்டவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள். ஆட்கள் கடத்தல், படுகொலைகள் செய்தல் போன்ற காரியங்களுக்கு பாதாள உலகத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த நிழலுலகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சிங்களர் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு , கோத்தபய அரசால் அவர்களுக்கு அதுவரை உதவியாயிருந்த இந்த நிழலுலக தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
காணொலி:
பாதாள உலக கும்பலை வளர்த்துவிட்டவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | UDARUPPU | Ganemulla