சீனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 மார்ச், 2025

முள்ளிவாய்க்கால் அழிவின் பின் சீனாவின் மூன்று முக்கிய நகர்வுகள். காணொலி. I ஊடறுப்பு (Udaruppu)

 

மகிந்தவுக்காக களத்தில் இறங்கிய சீனா.
மு.திருநாவுக்கரசு அவர்கள் நேர்காணல்.
ஊடறுப்பு தள நேர்காணல் காணொலி,


மேலேயுள்ள காணொலி உரையில் கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள் கீழே:

சீனாவின் வளர்ச்சியால் இதுநாள் வரை அமெரிக்காவை தலையாகக் கொண்ட ஒற்றை மைய அரசு இப்போது மீண்டும் இரட்டை மைய அரசாக பரிணமிக்க ஆரம்பித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றாலும் பெரும் அழிவுகளையும் சந்தித்த உலகப் பேரரசுகள், அதன் பின்பு இனி எந்தப் போர் நடந்தாலும் தங்கள் நாடுகளில் நடக்காமல், தாங்கள் பாதிக்கப்படாமல், பிற நாடுகளிலும் பிற கண்டங்களிலும் நடத்திக் கொள்வது என்கிற முடிவை எடுத்தன.

அப்படி நடத்தப்பட்ட ஒரு போர் உக்ரைன் போர். பலவீனமடைந்துவிட்ட ரஷ்யாவை உக்ரைன் போரின் மூலம் அதன் பொருளாதாரத்தை அழித்துவிட முடியும் என்று நினைத்த அமெரிக்காவிற்கும் அதன் ராணுவச் செயலகம் பென்டகனிற்கும் இந்த முன்னெடுப்பு பெரும் தோல்வியைக் கொடுத்திருக்கிறது.

வியாழன், 30 ஜனவரி, 2025

இலங்கை அரசின் கடல் சார் வெளியுறவுக் கொள்கையும் அதனால் அழிவுக்கு உள்ளாகும் ஈழத் தமிழரும். - மு.திருநாவுக்கரசு உரை.


 

ஜனவரி 30, 2025 அன்று லங்காஸ்ரீ செய்தி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்காக மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டியின் காணொலி, யூட்யூபில் கீழே பார்க்கலாம்.

 

காணொலி:

இலங்கையின் பல பகுதிகளை கைப்பற்றிய சீனா I ஊடறுப்பு (Udaruppu)


காணொலியில், மு.திருநாவுக்கரசு அவர்களின் உரையின் முக்கிய கருத்துக்கள் குறிப்புகளாக கீழே தரப்பட்டுள்ளன. 

உரைக் குறிப்புகள்:

உலக அளவில் இலங்கைமேல் பிறநாடுகள் ஈடுபாடு கொள்ள முக்கிய காரணம் அதன் புவியியல் அமைவிடமே.

இந்தியப் பெருங்கடலையும், அக்கடலில் பெருமளவு வாணிகம் மற்றும் அதிகாரத்தையும் கைப்பற்ற இலங்கையை

ஒரு முக்கிய கேந்திரமாக கொள்ளமுடியும். 


சாணக்கியன் சொன்னது 

உங்கள் எதிரியின் எதிரி, உங்களுக்கு நிரந்தர நண்பன்.

உங்கள் நண்பனின் நண்பன், உங்களுக்கு அவரது நலன் சம்பந்தப்படும்போது மட்டுமே நண்பன்.

உங்கள் அண்டை நாடு உங்களுக்கு எதிரி. அண்டை நாட்டின் அண்டை நாடு உங்களுக்கு நண்பன்.

சிங்களவருக்கு இந்தியா அண்டை நாடு. சிங்களவரின் எதிரி இந்தியா. இந்தியாவின் எதிரி சீனா. சிங்களவரின் நண்பன் சீனா.

உலகில் எந்த நாட்டை எடுத்தாலும் இந்தியாவைத் தாண்டி அது இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாது. சீனா தவிர.


ஈழத்தமிழர்கள் தங்கள் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இப்போதாவது தெளிவாக கண்டுகொள்ள வேண்டும்.


இன்றைய சூழலில், அரசற்ற ஒரு தேசிய இனம் நேரடியாக இன்னொரு வெளி அரசின் உதவியின்றி, தானே விடுதலையடைவது சாத்தியமில்லை.


குர்தீஸ் போராட்டத்தில் சுற்றி இருந்த எந்த இஸ்லாமிய நாடுகளும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அவர்கள் அமெரிக்காவை நாடினார்கள். இனப்படுகொலைக்கு உள்ளாவதை விட ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது  மேல் என்பதால் குர்தீஸ் மக்கள் இனப்படுகொலையாவதை தடுக்க அமெரிக்காவை நாடினர்.


ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. திரிகோணமலை துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை இந்த செயற்கைத் துறைமுகம் வரலாற்றில் பதிலீடு செய்திருக்கிறது.

இந்திய அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கொள்கை வகுப்பாளர்கள் ஆரியர்களின் வேதகால நம்பிக்கைகளை வைத்தே சிந்தித்ததால் வெளியுறவுக் கொள்கைகள் அந்த அடிப்படையிலேயே உருவாயின.

ஆரியர்களின் வேதகால நம்பிக்கைகளின்படி கடல் கடப்பது பாவமாகும். ஆரியர்களின் சக்கரவியூகம், அசுவமேதயாகம்,  ராஜசூயயாகம் போன்ற எவற்றிலும் கடல் சம்பந்தப்பட்டிருக்கவே செய்யாது.

ஆரிய அரசர்கள் செய்த அசுவமேதயாகத்தில் யாகம் செய்து கட்டவிழ்த்துவிடப்படும் குதிரை எந்தெந்த ராஜ்ஜியங்களின் எல்லைகளைத் தொடுகிறதோ அந்தந்த நாடுகளுடன் போர் செய்து வெற்றி பெறுவார்கள். அல்லது அந்த நாடுகளே தானே சரணடைந்துவிடும்.

காந்தி கடல் கடந்து லண்டனுக்குப் படிக்கப் போவது தடுக்கப்பட்டது கடல் கடப்பது பாவம் என்ற நம்பிக்கையால் தான். பின்னர் அவர் அதை வேறு சில சத்தியங்கள் செய்து கடந்து போனார்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டை ஆண்ட சோழப் பேரரசினர் தான் கடல் சார் கொள்கையை இந்தோ-பசிபிக் பகுதியை மையமாகக்  கொண்டு உருவாக்கினார்கள். அவர்கள் சுமத்ரா , ஜாவா வரை கடலில் சென்று நாடுகளை கைப்பற்றி ஆட்சி புரிந்தார்கள்.

2012ல் ஒபாமா இந்தோ-பசிபிக் கொள்கையை இதன் பின்னணியிலேயே உருவாக்கினார். சீனாவை கட்டுப்படுத்த.


இந்தியா 1947வ் சுதந்திரமடைந்த போது அதன் வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தவர்கள் நேரு, கிருஷ்ண மேனன், பணிக்கர்,  ஆகிய உயர்சாதியினரே.

இவர்கள் இந்திய வெளியுறவுக் கொள்கையை கடல் சார் கொள்கையாக(Oceanic policy) உருவாக்க கவனம் செலுத்தவில்லை. 

மாறாக, ஆரியர்களின் வேதகாலக் கொள்கைகளான நிலவழிக் கொள்கைகளையே பின்பற்றினார்கள். 

இக்கொள்கைகளினால், இந்திய ஆட்சியாளர்கள் அண்டை நாடான இலங்கையை  நூறு சதவீதம் நட்பு நாடு என்றே கணித்தார்கள். அது நூறு சதவீதம் தவறான கணிப்பாகும்.

இதே 1948 காலகட்டங்களில் வல்லபாய் படேல், ராணுவ தளபதி வைத்யா போன்றோர் இலங்கையை போரிட்டு பிடித்து இந்தியாவின் மாகாணமாக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தனர்.


ஆரம்பத்திலிருந்தே இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு வலையத்தில் உள்ள நாடு என்றேயும், நட்பு நாடாகவும் பிழையாகக் கணித்ததாலேயே இந்தியாவால் இன்றுவரை இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டுவர முடியவேயில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை பற்றிய பார்வையில் மாற்றம் வந்தது. அதை நிராகரித்து மீண்டும் பழையபடி இலங்கையை நட்பு நாடாகக் கருதவைக்க ஜே.ஆர.ஜெயவர்த்தனா ராஜதந்திரங்கள் பல செய்தார். அதன் விளைவாக இந்தியா மீண்டும் இலங்கையை நட்பு நாடாக பார்க்கும் பழைய பார்வைக்குள்ளே போய்விட்டனர்.


இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்த பேச்சுவார்த்தையின் போது பிரபாகரன் அதை மறுத்தார். அப்போது பேசிய ராஜீவ்காந்தி அவரது தோளில் தட்டி இந்த ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தற்காலிகமல்ல. பின்னால் படை இறக்கி அதை நிரந்தரமாக்கவே நான் இதைச் செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னால் சிங்களத் தலைவர்களின் ராஜதந்திர சாமர்த்தியத்தால் அந்த ஒப்பந்தமே கிழித்து எறியப்பட்டது.

13ஆவது சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியாவையும், தமிழரையும் மோதவிட்டு புலிகளுக்கு எதிரிகளாக இந்தியாவையே மாற்றினார். 

இந்தியாவை 13ஆவது திருத்த ஒப்பந்தம் சிக்கலில் கொண்டு மாட்டியுள்ளது. 13ஆவது ஒப்பந்தம் கைவிடப்பட்டால் இந்தியாவுக்கு இலங்கையின் மேல் எந்தப் பிடியும் கிடையாது. அது சிங்களரின் வெற்றி.

ஈழத்தமிழருக்கு இந்தியா இல்லையென்றால் எந்த விமோசனமும் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதை நன்கு புரிந்திருந்தனர் சிங்களர்கள்.

ஈழப்போராட்டத்தின் தளமாக பாக் நீரிணையும் , தமிழ்நாடும் விடுதலைப் புலிகளுக்கு இருந்தன. சிங்களரின் தந்திரத்தால் அதை ஈழத்தமிழரிடமிருந்து வெட்டி விட்டார்கள்.

இந்த 2009 இனப்படுகொலையால் நன்மையடைந்தவர்கள் யார் எனில், மேற்குலகம் மட்டுமே.
அமெரிக்கா இலங்கை சீனாவை நோக்கி மிக நெருங்கினால் அதைப் பிடித்திழுக்க போர்க்குற்ற விசாரணை என்கிற ஆயுதத்தை எடுக்கும். இலங்கை அமெரிக்காவிடம் பணிந்து போக ஆரம்பித்தவுடன் அந்தப் பேச்சை விட்டுவிடும். இந்தியாவும், ஈழத்தமிழர்களும் 2009 இனப்படுகொலையை தங்கள் கையிலெடுக்கத் தவறிவிட்டன.

இந்தியா இலங்கையை தமிழர் வாழும் இலங்கை , சிங்களர் வாழும் இலங்கை என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்காமல் ஒரே இலங்கை, தனது நட்பு நாடு என்று மட்டுமே பார்த்தால் சிங்கள அரசின் முதுகில் குத்தும் துரோகச் செயல்களைத் தான் தொடர்ந்து எதிர் கொள்ளும். இலங்கையிடம் எந்நாளும் இந்தியா தோற்றபடியே தான் இருக்கும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலன்றி இந்தியா இந்திய-பசிபிக் கடல் பகுதியில் சீனாவிடமிருந்து தப்பிப்பது கடினம்.

அதிகம் பார்க்கப்பட்டவை: