2025 மார்ச் மாத ஆரம்பித்தில் முன்னாள் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலுக்குப் பிறகு, பட்டலந்தை முகாம் குறித்து அவர் கூறிய கருத்துக்களால், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்தும், பட்டலந்தை வதை முகாம் குறித்தும் நாட்டில் அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இதன் பின்னர் பட்டலந்தை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜேவிபி அரசாங்கத்தினால் நாடாளுமன்ற அவைத் தலைவர் பிமல் இரத்திநாயக்கவினால் 2025 மார்ச் 14 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளைக் கடுமையாக நிராகரித்து, அது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் ரீதியான முயற்சி என்று கூறினார். ஆணைக்குழு உருவாக்கப்பட்டது தன்னை இழிவுபடுத்தும் நோக்கத்தால் தூண்டப்பட்டது என்றும், ஆனால் இறுதியில் அந்த இலக்கை அடைய முடியவில்லை என்றும் வலியுறுத்தினார்.
1988-1990 கிளர்ச்சியின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வசதி செய்வதில் தனது பங்கை மட்டுமே அறிக்கை குறிப்பிடுவதாக விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார், இந்த செயல்பாடு நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
லங்கா ஸ்ரீ செய்தி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில், ஊடறுப்பு என்கிற தலைப்பில் நடந்த காணொலி உரையாடலில்,
சமீபத்தில் நிகழ்ந்த இந்த அரசியல் நிகழ்வுகளின் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்கேயின் பங்கு பற்றி, சிங்கள ஒடுக்குமுறையின் தீவிரமான விஷயங்களை பற்றி தெளிவாக்குகிறார் அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
அந்தக் காணொலி யூட்யூப் வலைத்தளத்தில் காணலாம். அதன் இணைப்பு கீழே.
காணொலி: