ஈரான் போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈரான் போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஏப்ரல், 2026

ஈரான் மீதான அமெரிக்காவின் யுத்தம் உருவாக்கியுள்ள உலகளாவிய நெருக்கடி ஈழத் தமிழருக்கு தந்துள்ள வாய்ப்பு என்ன.

 

ஈரானின் போர்க் கப்பலை அமெரிக்கா இலங்கையின் கடல் எல்லையில் வைத்து தாக்கி அழித்ததானது, இலங்கை சிங்கள அரசிற்கும், அது தனது அடிப்படை நண்பனாக கொண்டுள்ள சீனாவிற்கும் சில எச்சரிக்கைகளை சொல்லியுள்ளது.


இலங்கையின் பொருளாதாரம் இந்த அமெரிக்காவின் ஈரான் மீதான போரினால் இன்னும் மோசமான நிலையை அடையக் கூடும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் பொருளாதாரப் பின்னடைவு - recession ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

இந்த ஆபத்து காலத்தில் தான் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசை எதிர்த்த தங்கள் போராட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். சிங்கள அரசு மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் போது மட்டுமே அது தமிழர்கள் தங்களுக்கான தீர்வை நோக்கி செல்வதை தடுக்க இயலாமல் நிற்கும்.

சிங்கள அரசுகள் உலகில் உள்ள சீன, இந்திய, அமெரிக்க வல்லரசுகளுடன் நயந்து பயந்து நடித்து தனது பொருளாதார நிலையை தக்க வைத்துக் கொண்டு தன்னை காத்துக் கொண்டே இருந்தால் அது தனது இறுதி இலக்கான தமிழரை இலங்கையில் இருந்து துடைத்து அழிப்பதை செய்து முடிக்கவே முயலும். ஒரு போதும் தமிழருக்கான அமைதி , உரிமைகளை தருவது பற்றி சிந்திக்கவே சிந்திக்காது. 



வியாழன், 26 மார்ச், 2026

ஈரான் போர். அமெரிக்கா நினைத்ததை செய்துவிட்டது - அநுர இந்திய புதிய உறவு.

 ஈரான் போர். அமெரிக்கா நினைத்ததை செய்துவிட்டது - அநுர இந்திய புதிய உறவு #iranus #india #IndiasRoleinPeaceEfforts.  25-03-2026 அன்று IBC Tamil இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணல்.






அதிகம் பார்க்கப்பட்டவை: