அமெரிக்காவின் பச்சைக்கு எதிரான போர்தான் ஈரான் மீதான போர். ஈரான் யுத்தத்திற்குப் பின்னால் இஸ்லாமியருக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து.
இலங்கைக்கு நிதி நெருக்கடி வரும் நேரங்களில் எல்லாம் அதற்கு பண உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையின் அரசுகள் எப்போதும் சீனாவுடன் கைகோர்த்து நிற்கும் இலங்கையின் தன்மையைக் கண்டு எரிச்சலாகவே உள்ளன.
உலக தாதா தன்னை விட சீனாவை நெருங்கி இலங்கை சென்றால் அதன் நிலைமையை தான் எப்படி கையாளும் என்று ஒரு எடுத்துக்காட்டு காட்டி புரியவைக்கத் தான் ஈரானின் போர்க் கப்பலை இந்திய எல்லை தாண்டி, இலங்கை கடல் எல்லையில் ஏவுகணை வீசித் தாக்கி அழித்தது அமெரிக்கா. இந்தியா இதில் தனக்கு பங்கு இல்லை என்று சொன்னாலும், இந்தியாவிற்கு தெரியாமல் அதன் மௌனமான அங்கீகாரம் இல்லாமல் அமெரிக்கா இத்தகைய தாக்குதலை செய்ய வாய்ப்பு இல்லை.
-- .. -- -- -- -- -- -- --
இப்போது அமெரிக்கா ஈரான் மீது செய்திருக்கும் யுத்தமானது தற்போதுள்ள உலக ஒழுங்கை Geo-political order , மாற்றிவிடவில்லை. ஆனால் குழுப்பி இருக்கிறது. வலுவான சம பலமுள்ள இரு நாடுகள் போரிடும் போது மட்டுமே உலக ஒழுங்கானது மாற்றி அமைக்கப்படும் சாத்தியம் உள்ளது. அமெரிக்கா-ஈரான் மோதலில் அத்தகைய சாத்தியப்பாடுகள் இல்லை.
யுத்தங்கள் இல்லாமல் உலக ஒழுங்கை மாற்ற அமெரிக்கா பனிப்போர் காலத்தில் சீனாவுடன் உறவுகளை புதுப்பித்துக் கொண்டது. சீனா-ரஷ்யா இடையேயான உறவை முறிக்க அமெரிக்கா செய்த இந்த தந்திரமானது சீனாவை ரஷ்யாவிடமிருந்து பிரித்தது. அதனால் சோவியத் யூனியன் விழுவது துரிதப்படுத்தப்பட்டது.
ஆனால் சீனா தன்னை உலக வல்லரசாக வளர்த்துக் கொள்ளவும் அந்த நகர்வு உதவியது. 40 வருடங்களுக்குப் பின்பு, இன்று, அதே சீனா உலக வர்த்தகத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடும் இடத்திற்கு வளர்ந்துள்ளதை தனது நெருக்கடியாக பார்க்கும் அமெரிக்கா அத்தகைய நிலையை குலைத்துப் போடவே சீனாவின் எண்ணை வர்த்தகக் கூட்டாளி ஈரான் மீதான இந்தத் தாக்குதலை செய்திருக்கிறது.
--- --- --- --- --- --- --- --- --- ---
இந்தப் போரானது உலக ஒழுங்கில் சீர்குலைத்து விட்ட ஒரு குறிப்பிடத்தக்க விடயம் அரச இறையாண்மை அழிப்பு - destruction of state sovereignty. எந்த நாடும் எந்த நாட்டையும் தாக்கலாம். ஜனாதிபதிகளை நேரடியாக தாக்கி கொல்லலாம். கடத்தலாம். மக்கள் மேல், மருத்துவமனைகள் மேல் குண்டு போடலாம். அதை வேறு எந்த நாடும் தட்டிக் கேட்காது, கேட்க முடியாது என்கிற நிலைமையை புதிதாக அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
1648 ஆம் ஆண்டு தான் அரசுகளின் இறையாண்மை கோட்பாடு, வெஸ்பாலியா உடன்படிக்கை மூலம் நிறுவப்பட்டது. அதன் படி, ஒவ்வொரு நாடும் இறையாண்மை கொண்டுள்ளது. வேறொரு நாடு எல்லை தாண்டி அதன் மீது தாக்குதல் நடத்தவோ, அதன் சுதந்திரத்தை பறிப்பதோ இறையாண்மை உரிமையை மீறுவதாகும். அது கடுமையாக சர்வதேச சமூகத்தால் தண்டிக்கப்படும். இதுதான் அரசுகளின் அது சிறிதோ, பெரிதோ, அரசுகளின் உரிமைகளை, இறையாண்மையை பாதுகாக்க உருவாக்கப்பட்ட வெஸ்பாலிய கோட்பாடு ஆகும். அதை இன்று அமெரிக்கா தூக்கி எறிந்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக