காணொலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

ரணில் - மோடி 2023 ஒப்பந்தமும் இந்தியா - இலங்கை கடல்வழிப் பாலமும்.

 ரணில் - மோடி 2023 வரலாற்று ஒப்பந்தம் தகர்ப்பு. ஏன் ? மு.திருநாவுக்கரசு அவர்களின் நேர்காணல். 07.02.2026.

ஊடறுப்பு செய்தித் தளத்திற்காக வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் லங்காஸ்ரீ ஊடகவியலாளர் தமிழரசு அவர்களுக்கு வழங்கிய இணைய நேர்காணல். 07.02.2026.



ஜூலை 2023-ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையிலான டெல்லி சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பொருளாதாரக் கூட்டாண்மை தொலைநோக்கு ஆவணத்தை (Economic Partnership Vision Document) உருவாக்கியது. இது எரிசக்தி, கடல்சார் மற்றும் வான்வழி இணைப்பு, வர்த்தகம், மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு, அத்துடன் இந்தியா-இலங்கை இடையிலான நிலப் பாலம் (Land Bridge) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது. 
ரணில் - மோடி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் (ஜூலை 2023):

பொருளாதார தொலைநோக்கு:
 நீண்ட காலப் பொருளாதாரக் கூட்டாண்மை, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • எரிசக்தி இணைப்பு: இரு நாடுகளின் மின்சாரக் கட்டமைப்பு (Electricity Grid) மற்றும் திருகோணமலை எரிசக்தி மையத்தை மேம்படுத்துதல்.
  • நிலப் பாலம் (Land Bridge): இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் நிலப் பாதையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புதல்.
  • டிஜிட்டல் மற்றும் வர்த்தக பரிவர்த்தனை: இந்திய ரூபாய் (INR) மூலம் வர்த்தகம் மற்றும் UPI அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்துதல்.
  • எரிபொருள் குழாய்: இலங்கைக்கு எரிபொருள் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் feasibility study.
  • பாதுகாப்பு மற்றும் இணைப்பு: கடல்சார், வான்வழி மற்றும் துறைமுக இணைப்பு (திருகோணமலை, கொழும்பு) மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல்.
இந்தியப் பிரதமர் மோடிக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே 2023ல் வடிவமைக்கப்பட்ட இந்த வரைவு, பெயரளவில் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டாலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போல தெளிவற்ற உறுதிமொழியல்லாத விடயங்களையே கொண்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தி்ல் வழக்கமான இரு நாடுகளிடையேயான பொருளாதார, தொழில் அபிவிருத்தி போன்றவை பேசப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானது இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கை மன்னாருக்குமிடையே கடல் மேல் ஒரு தரைவழிப் போக்குவரத்து பாலம் அமைப்பது என்பதாகும். இந்தப் பாலத்தின் நீளம் கடல்வழியே வெறும் 23 கி.மீ நீளமேயாகும்.
பார்க்க எளிதானது போலவும், இருநாடுகளும் விரும்பிச் செய்த விடயம் போலவும் காணப்பட்டாலும் இது உண்மையில் இலங்கை ஒருபோதும் செய்ய விரும்பிய விடயம் அல்ல. முழுக்க முழுக்க இந்தியாவின் முன்னெடுப்பின் பேரிலேயே இவ்விடயம் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவையும் இலங்கையையும் வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக இணைப்பதில் இந்தப் பாலம் பெரும் பங்கை ஆற்றக் கூடும்.
என்பதை சிங்கள அரசுகள் ஒரு போதும் அனுமதிக்காது. வரலாற்றில் அப்படி ஒரு பாலம் ஒருபோதும்
சாத்தியமில்லை என்பதை வரலாற்று அரசியல் நிகழ்
வுகளின் ,பின்னணிகளின் ஊடே விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.  
இலங்கை இந்தியா இடையே ஒரு பாலம் அமைப்பதானது இலங்கையை தனி நாடாக
இருப்பதிலிருந்து மாற்றி இந்தியாவின் ஒரு இணைப்புப் பகுதியாக மாறுவதை நோக்கி
கொண்டு செல்லும் என்றும், ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களை விடவும் அதிகாரம்
பெறுவார்கள் என்றும் சிங்களர்கள் உள்ளூர அச்சப்படுகிறார்கள். தமிழர்கள் இலங்கையின் வடபகுதியிலும்
இந்தியாவின் தென்முனையிலும் வாழ்வதால் ஈழத் தமிழர் மீதான, இந்தியா மீதான
அச்சம் சிங்களருக்கு வரலாற்று ரீதியாக மகாவம்ச காலத்தில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தியாவின் வரலாற்று மனோபாவமும் இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள
ஒரு சிறு தீவு என்றே கருதி வந்திருக்கிறது. சிந்து நதியில் ஆரம்பித்து இலங்கை வரை இந்தியாவின்
நீட்சி என்ற கருத்திலேயே சிங்களத்தீவிற்கொரு பாலம் அமைப்போம்என்று பாரதியாரே பாடியிருப்பதில் இருந்து இதை உணரலாம்.

அறிக்கைகளின்படி, ராமேஸ்வரத்தையும் (இந்தியா) தலைமன்னாரையும் (இலங்கை) இணைக்கும்
முன்மொழியப்பட்ட சாலை மற்றும் ரயில் பாலத் திட்டத்திற்கு தோராயமாக 5 பில்லியன் டாலர்
(சுமார் ₹24,000 கோடி முதல் ₹40,000 கோடிக்கும் மேல்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இத்திட்டங்களுக்கு நிதியளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும்,
இந்தத் திட்டம் நிதி உதவிக்காகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டின் முந்தைய
அறிக்கைகள், ஆசிய வளர்ச்சி வங்கி 3.5 பில்லியன் டாலர் (₹220 பில்லியன்) நிதியுதவி அளிப்பதாக
உறுதியளித்திருந்ததாகத் தெரிவித்தன.
ஆனால் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை நம்ப வைத்து செய்த அனைத்து ஒப்பந்தங்களிலும்
இந்தியாவை கைகழுவி தோல்வியுறச் செய்த இலங்கை சிங்கள அரசுகள் இந்த இணைப்புப்
பாலத்தை ஒருபோதும் நிறைவேற்றாது. ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் பகுதிகள்
முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டு தமிழர்கள் தடயமின்றி அங்கே அழிக்கப்பட்டால்
அது நிரந்தரமாக சாத்தியப்படாமலே போய்விடும். தனித்த சிங்கள நாடு என்கிற தாங்கள்
உருவாக்கிவரும் அடையாளத்தை பேணவே சிங்களர் விரும்புவர். அப்படிப்பட்ட சிங்கள இனமயமாக்கல்
மூலம் தமிழரை அழிப்பது தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில்
நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை தமிழீழம் அமைந்தால் அது தமிழீழத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான
பாலமாகத் தான் அமைய முடியுமே தவிர சிங்கள இனவாத இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடையே இப்படி ஒரு பாலம் அமையவே முடியாது.

இலங்கை அரசுகளின் இந்த இந்திய எதிர்ப்பு வாதத்தை தெளிவாக விவரிக்கிறார்
இந்த காணொளியில்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

ஒற்றை மைய உலக ஒழுங்கு சீர்குலையும் காலத்தில் வல்லரசுகளின் புதிய ஆதிக்க குவிமையங்கள்.

லங்கா ஸ்ரீ பத்திரிக்கையின் ஊடறுப்பு நிகழ்வில், ஈழத்தைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் திரு மு.திருநாவுக்கரசு அவர்கள், நெறியாளர் தமிழரசுவுக்கு,  31-01-2026 அன்று வழங்கிய நேர்காணல்.



லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் முதல் பகுதி: 



லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் இரண்டாம் பகுதி:



இந்த நேர்காணல்களில் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள் சில சுருக்கமாக கீழே...

- இந்த 2026ல் உலக ஒழுங்கு குலைந்திருக்கிறது. ஆனால் புதிய உலக ஒழுங்கு இன்னும் உருவாகவில்லை.

- America First என்கிற அமெரிக்காவின் தன்னை முன்னிலைப்படுத்தும் கருதுகோள் சிக்கலுக்கு உள்ளாகிறது. 

- இந்த சீர்குலையும் உலக ஒழுங்கு சூழலில், இரு பெரும் நாடுகள் அல்லது நாட்டு அணிகளுக்கு இடையிலான பெரும்போர் தான் புதிய உலக ஒழுங்கை உருவாக்கக் கூடிய  பலத்தை அப்போரில் வெற்றி பெறும் நாட்டிற்கு அல்லது வெற்றி பெறும் அணிக்கு வழங்கும். ஆனால் இத்தகைய சூழல் நடக்காததால் உலக ஒழுங்கை அமெரிக்காவால் மாற்ற முடியாது.

- சீர்குலையும் உலக ஒழுங்கில் சந்தைக்கான போட்டியில் அமெரிக்காவிற்கு சவாலாக இருப்பது சீனாவே. அமெரிக்கா ஏகாதிபத்தியம் கம்பெனிகளின் monoploy ஆக இருக்கிறது. சீனா அரசு சார்ந்த(state sponsored), சந்தை ஏகாதிபத்தியமாக, monoopoly ஆக இருக்கிறது. எனவே சீனாவின் பலம் அதிகமாக இருக்கும்.

- சீனா கடந்த 25 ஆணடுகளாக தொழில்நுட்பத்தை மேற்குலகிடமிருந்து பெற்றுக் கொள்ள தனது சந்தையை திறந்து விட்டது சீனா மற்றும் ரஷ்யா. சீனா உலக தொழில்நுட்பம் அனைத்தையும் பெற்று இன்று மிதமிஞ்சிய வளர்ச்சியடைந்து விட்டது.

- 45 வருட தொழில்நுட்பமயமாக்கப்பட்ட உற்பத்தியால், மாசுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலால் ஆர்க்டிக் கடல் உருகுகிறது. அது புதிய எளிதான கடல்வழிப்பாதையை உலக வர்த்தகத்திற்கு ஏற்படுத்துகிறது. இதைப் பயன்படுத்தி சீனா தனது உற்பத்திப் பொருட்களை மேற்குலகம், கனடா மற்றும் உலகநாடுகள் அனைத்திற்கும் கொண்டு செல்வது இன்னும் எளிதாகிறது. எனவே தான் இந்தப் பாதையில் இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயல்கிறது. சீனாவின் எளிய கடல்வழிப் பாதையை தனது கட்டுக்குள் வைக்க முயல்கிறது.

- முதலாம் , இரண்டாம்  உலகப் போர்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையேயான போர்கள் அல்ல. வளர்ச்சியடைந்த முதலாளிகளிடையே நடந்த பன்னாட்டு சந்தைப் பிடிப்பின் போட்டியால் நடந்த போர்களே ஆகும். முதலாளி வர்க்கம் என்கிற ஒரே வர்க்கத்துக்குள்ளேயே நடந்த முரண்களே இந்தப் போர்கள் ஆகும்.

- அமெரிக்கா ஈரானுடன் நேரடியாக போரில் இறங்கும் வாய்ப்பு குறைவு. ஈரான் மேல தாக்குதல்கள் செய்யலாம். தலைவர்களை கொல்லலாம். உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால் நேரடியாக போரில் இறங்குவது சரியான அமெரிக்காவின் முடிவல்ல. தேவையுமல்ல.

- இன்றைய உலக ஏகாதிபத்திய சந்தைப் போட்டியில் கிரீன்லாந்து, வெனிசூலா மற்றும் இலங்கை ஆகிய போட்டிக்கான குவிமையங்கள் உள்ளன.

- தந்தை செல்வா காலம் முதலே தமிழர்கள் சுயாட்சி என்பதை அடைய முடியாமலே சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தொடர்ந்து தோல்வியடைந்தே வந்துள்ளனர். ஒரு தலைவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியலை வெற்றிகரமாக புரிந்து உலக அரசியலை செய்ததில்லை. 

- பாக் நீரிணை தமிழரின் கட்டுப்பாட்டில் இருந்தவரை ஈழப் போராட்டம் வென்றது. பாக் நீரிணை தமிழரை விட்டுப் போனபின்பு ஈழப் போராட்டம் எளிதில் அழிக்கப்பட்டது.

- இந்திராகாந்தி காலத்தில் 1984ல் இந்திரா-பார்த்தசாரதி தீர்வு ஒன்று திட்டமிடப்பட்டது. கிரேக்க-துருக்கி தீர்வு போல, ஒரு நாடு - இரு அரசுகள் என்கிற அமைப்பை உருவாக்க தமிழர் பகுதியில் படையை இறக்கி இந்தியப் படை தமிழர் பகுதியை ஆளும் என்றும், சிங்களர் பகுதியை சிங்களர் ஆளட்டும் என்றும் திட்டமிடப்பட்டது. அது நிறைவேற்றப்படுவதற்குள் இந்திராகாந்தி கொல்லப்பட்டார்.

மேலேயுள்ள இரண்டு பாகங்களின் தொகுப்பு :

உலக ஒழுங்கு சீர்குலையும் காலத்தில் வல்லரசுகளின் புதிய ஆதிக்க குவிமையங்கள். நேர்காணல்

புதன், 23 ஜூலை, 2025

இலங்கையில் மீண்டும் இனப்படுகொலை நடக்கும். - மு.திருநாவுக்கரசு அவர்களுடன் நேர்காணல்.

 


தடம் இணைய இதழுக்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலானது, 5 காணொலி பாகங்களாக யூட்யூப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொலிகளின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

இலங்கையில் சிங்களர், இலங்கை பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து 1948ல் விடுதலை அடைவதற்கு முன்பும் கூட  தமிழரை தங்கள் இனத்தின் எதிரிகளாகவே கருதிவந்தார்கள் என்பதற்கு வரலாற்று சம்பவங்கள் நிறையவே உண்டு.


1948ல் பெரும்பான்மையான பலத்துடன் இலங்கையின் அரசை கைப்பற்றியதிலிருந்து திட்டமிட்ட வகையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளனர் சிங்களர்.

1980களில் ஆயுதப் போராட்டம் தமிழரால் சிங்களர் சித்திரவதைக் கொடுமைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது. 1983 ல் யாழ் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு ராணுவ வேனை விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்து தகர்த்ததில் அதில் பயணம் செய்த 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை கொழும்பில் வைத்து தகனம் செய்ய சிங்கள அரசு முயல, ஆனால் சிங்கள இனவெறியாளர்கள் அந்த வீரர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி அங்கே அவ்வுடல்களை வைத்து பெரும் ஊர்வலங்கள் நடத்தி தமிழர் மீதான வெறுப்புணர்வில் நெய் ஊற்றினர்.

இதைச் சாக்காகக் கொண்டு தமிழரைக் கொல்ல சிங்கள அரசு அதிகாரத்திலிருந்தவர்கள் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, சாதாரண பொதுமக்களான ஈழத்தமிழரை கும்பல் கும்பலாக சேர்ந்து சிங்கள இனவெறியர்கள் அடித்து, எரித்து, பாலியல் வன்புணர்வு செய்து, தீயில் தூக்கிப் போட்டு , இப்படி பலவாறாக கொலை செய்தார்கள். 


தமி்ழ் மக்களின் வீடுகளில் ராணுவம் மற்றும் போலீஸ் உதவியுடன் புகுந்த 

சிங்களர்கள் தமிழரை சித்திரவதை செய்து கொன்றதுடன் அவர்கள் வீட்டிலிருந்த அனைத்து உடைமைகளையும் கொள்ளையடித்து அல்லது அழித்துச் சென்றார்கள்.


இலங்கை வெலிக்கடை சிறையிலும் இந்தப் படுகொலையை ஒட்டி ஏற்கனவே சிறைத் தண்டனையில் வைக்கப்பட்டிருந்த புளோட் ஆயுதப் போராட்டக் குழுவின் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மூன்று பேரையும், அவர்களையும் சேர்த்து மொத்தம் 35 தமிழர்களை , சிறைக்குள்ளேயே சிங்கள இனவெறியர்கள் சிறைத்துறையின் அனுமதியோடு, சித்திரவதை செய்து கொன்றனர்.


1983 யூலைக் கலவரத்தினால் 3000 பேர்வரை, தமிழர்கள் குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை என அனைத்து வயதுகளிலும் கொல்லப்பட்டனர், பத்துலட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்று முகாம்களில் அடைக்கப்பட்டனர். 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை என்பதாக சிங்கள அரசு இதைத் திட்டமிட்டு செய்து முடித்தது. இது திட்டமிட்ட செயல்தான் என்பதற்கு எண்ணற்றோர் சாட்சிகளாக உள்ளனர், திரு மு.திருநாவுக்கரசு அவர்களும் அப்படி ஒரு சாட்சியாக நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை உரைக்கிறார்.

நடத்தப்பட்ட யூலைக் கலவரம், படுகொலைகள் சம்பந்தமாக, தனது அனுபவங்களையும், அப்போதைய சிங்களரின் இன அழிப்பு அரசியலையும் பற்றி இந்தக் காணொலியில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் , வரலாற்று ஆசானுமாகிய திரு மு.திருநாவுக்கரசு அவர்கள்.


தடம் இணையத்துக்கு வழங்கிய பேட்டியின் காணொலி. 

காணொலி பாகம் 1. 
கருப்பு ஜூலை புகைப்படம் வெளிவந்தது எப்படி? | Welikada Prison Massacre




காணொலி பாகம் 2 
மகாவம்சம் சொல்வது ; தமிழர்கள் மிருகத்தைவிட கேவலமானவர்கள் | Tamil Tigers peace Talks



இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர் தீக்சித் அவர்களின் கூற்றுப்படி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முறித்தது சிங்கள அரசே. விடுதலைப் புலிகள் அல்ல. 
கீழ்க்காணும் Assignment Colombo என்கிற புத்தகத்தின் பக்கங்களில் அவர் தந்த அறிக்கையை படிக்கலாம்.

 




காணொலி பாகம் 3 
இலங்கையின் ஜனாதிபதியும் இடதுசாரித் தலைவருமான அநுரகுமார திசநாயகே ஏன் இதுவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு வருந்தி ஒரு மலர்வளையும் கூட வைத்ததில்லை ? 



இலங்கை இரண்டாக கண்டிப்பாக உடையும். தமிழருக்கான ஒரு தனி நாடு உருவாகியே தீரும். அப்போது ஜே.வி.பி மீண்டும் ஒரு இன அழிப்பை முன்னெடுக்கும். குறைந்தது இரண்டு லட்சம் பேர் கொல்லப்படுவார்கள். ஆனால் இலங்கை பிரிவதைத் தடுக்க இயலாது.

காசா படுகொலைகளையும், உலகெங்கும் உள்ள இனப்படுகொலைகளையும் ஆண்டுதோறும் இன்றும் நினைவு கூறும் தமிழ்நாட்டு இடதுசாரிகள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏன் ஒரு முறை கூட நினைவு கூரவில்லை ? கம்யூனிசம் என்கிற தத்துவத்திற்கே இது இழுக்கு இல்லையா. 






திங்கள், 21 ஜூலை, 2025

1983 யூலைக் கலவரம் சம்பந்தமாக, இதுவரை வெளிவந்திராத புதிய தகவல்கள் - மு.திருநாவுக்கரசு

 

1983 ல் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, ஈழத்தமிழர் மீது நடத்தப்பட்ட யூலைக் கலவரம், படுகொலைகள் சம்பந்தமாக,  இதுவரை வெளிவந்திராத புதிய தகவல்கள்.

வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள்,
யூலைப் படுகொலைகளின் நினைவு தினத்தையொட்டி,
லங்காஸ்ரீ  செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

20-07-2025

மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய நேர்காணலின் காணெலி, யூட்யூப் வலைத்தளத்தில் பார்க்க. இணைப்பு கீழே.




காணொலியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் சில கீழே..

1983 ல் இலங்கையில் நடந்த கறுப்பு யூலை படுகொலைகள் சிங்களரால் தமிழர் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் இனியும் சிங்களருடன் தமிழர் இணைந்து சமமாக , சம உரிமைகளோடு வாழ்தல் சாத்தியமற்றது என்பதை நிரூபித்தது.




இப்படுகொலைகளுக்கு ஆதாரமாக இருந்தது அந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றை எடுத்தவர்கள் சிங்கள கொம்யூனிஸ்ட் கட்சியினர். அக்கட்சியின் செயலாளர் கீர்த்தி பாலசூர்யாவின் தலைமையில் இருந்த தோழர்கள் அப்புகைப்படங்களை எடுத்து தோழர் மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு அனுப்ப, அவர் மூலமாக அவை பிரபாகரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 
கீர்த்தி பாலசூர்யா எடுத்து அனுப்பிய அந்த 14 கறுப்பு வெள்ளை புகைப்படங்களை பேபி சுப்ரமணியம் அவர்கள் தமிழ்நாட்டில் கறுப்பு யூலை படுகொலை தொடர்பான கண்காட்சியில் காட்சிப் படுத்தினார். அதன் பின்பே அவை உலகெங்கும் பரவி கறுப்பு யூலைப் படுகொலைகளின் சாட்சியமாக மாறி நின்றன.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

காலனி எதிர்ப்புப் போராட்டம் என்பது காலனி அரசை எதிர்த்து விடுதலை கோரிய போராட்டம். அவை நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் ஒடுக்கும் அரசு அந்நிய நாட்டு அரசு. அது என்றாவது ஒரு நாள் வெளியேறியே ஆக வேண்டும் என்பது விதி.
ஆனால் தேசிய இனப் போராட்டங்கள் உள்நாட்டில் உள்ள இனங்களுக்கிடையே நிகழ்பவை. தேசிய இனப் போராட்டம் நிகழ, நாட்டிற்கு வெளிய ஒரு பலமான அரசு ஆதரவாக இருக்க வேண்டும். இது ஒரு தேவை.

அப்படி ஒரு ஆதரவாக இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழருக்கு இருந்தன. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழ்நாட்டில் தளம் அமைத்து இயங்கியவரை தான் வெற்றி பெற்றது. அது பாக் நீரிணைப்பில் தனது கட்டுப்பாட்டை இழந்த பின்பு, தமிழ்நாட்டின், இந்திய அரசின் ஆதரவை இழந்த பின்பு அது படிப்படியாக பலமிழந்து கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனது.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

உலகில் ஒடுக்கப்பட்ட இனங்கள் விடுதலையடைந்தது, விடுதலையடைந்திருப்பது, இனியும் விடுதலையடைவதானது, ஒரு பலம் பொருந்திய வெளி அரசின் உறுதியான ஆதரவு இல்லாமல் சாத்தியமே இல்லை என்பது வரலாற்று உண்மை.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 
ஈழத் தமிழர் இனம் சிறிய எண்ணிக்கையிலானது, இலங்கையில் அதன் விடுதலைப் பரப்பும் சிறியது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஈழப் போராட்டம் நடந்தால் அது தோல்வியுறும் என்று 1980 லேயே கணித்துச் சொல்லியிருக்கிறார் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள். 20 வருடங்களுக்கும் மேலாக ஈழப் போராட்டம் இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் ஆதரவுத் தளத்தை இழந்தாலும் ஈழப் போராட்டம் இலங்கை மண்ணில் தோல்வியுறும் என்றும் கணித்துக் கூறினார். அப்படி தமிழ்நாட்டின் ஆதரவுத் தளத்தை இழக்க வைக்க சிங்களர் செய்த சாணக்கியத் தந்திரங்கள் ஈழப் போராட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து தனிமைப் படுத்தின.
 
--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  --
முள்ளிவாய்க்காலுக்குப் பின் விடுதலைக்கான நம்பிக்கைகள் அனைத்தும் முடிந்து போயின என்றாலும் இனப்படுகொலை, அதற்கான பதில் என்ன, யார் பொறுப்பு, யார் தீர்வு, யார் குற்றவாளி என்கிற கேள்விகளை உலகம் முழுவதும் மக்களிடம் எழுப்புவதன் மூலம் அந்த அரசுகளையும் தமிழினப் படுகொலைக்கான நியாயத்தை நோக்கி ஈர்க்கமுடியும். இனப்படுகொலையே , அதற்கான நியாயத்தை எழுப்பி ஜனநாயக ரீதியாக உலகெங்கும் போராடுவதே ஈழத்தமிழரின் விடுதலைக்கான புதிய ஆயுதமாக இருக்கிறது.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

ஈழத்திற்கு சைப்ரஸ் தீவுகள் பாணியிலான தீர்வு ஒன்றை இந்திராகாந்தி - பார்த்தசாரதி வைத்திருந்தார்கள். அதன்படி இந்திய ராணுவம் இலங்கையின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் இறங்கி சிங்களரை விரட்டியடிக்கும். பின்பு தனது படையை அங்கேயே வைத்திருந்து தமிழர்களை பாதுகாக்கும். தமிழருக்கான உரிமைகளை சிங்கள அரசு வழங்க ஆரம்பித்த பின் சில ஆண்டுகளில் படிப்படியாக இந்திய ராணுவம் அப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும்.
--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  --
ஐக்கிய நாடுகள் சபை அரசுகளுக்கானதே, அரசுகளுக்கிடையே நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கவே உருவாக்கப்பட்டதே அன்றி, அது உலகெங்கும் ஒடுக்கப்படும் இனங்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. அந்த சபையானது நாட்டு அரசுகளுக்கிடையான தகராறுகள், பிரச்சனைகளை தீர்க்க மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்க முன்வராது. முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் போய் ஒப்பாரி வைப்பதால் ஈழத்தமிழருக்கு எந்த தீர்வும் கிடைத்துவிடாது .

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

ஈழத் தமிழர்கள் தங்களுக்கான ஆதரவை உலக நாட்டு அரசுகளை கேட்பதை விட, உலக நாட்டு மக்களிடமிருந்தும், இந்திய அரசை கேட்பதை விட இந்திய மக்களிடமிருந்தும், தமிழ்நாட்டு அரசுகளை கேட்பதை விட தமிழ் மக்களிடமிருந்தும் முதலில் திரட்ட முனைந்தால், மக்களின் கவனத்தை ஈர்க்க முடிந்தால், இந்த அரசுகள் அனைத்தும் பின்னர் மெதுவாக ஈழத்தமிழருக்கு நியாயம் செய்ய தானே முயற்சி செய்யவேண்டிய தேவை வரும்.


--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 





திங்கள், 21 ஏப்ரல், 2025

இலங்கை தீவு இரண்டாக உடையும் ஆபத்து - மு.திருநாவுக்கரசு நேர்காணல். ஊடறுப்பு தளம்.

 இலங்கை தீவு இரண்டாக உடையும் ஆபத்து  என்கிற தலைப்பில், 20 ஏப்., 2025 அன்று, வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஊடறுப்பு யூட்யூப் வலைத்தளத்திற்கு வழங்கிய பேட்டி.

இலங்கையின் ஆதிக்குடி குவேனி என்கிற தமிழச்சியா ? | History of Sri Lanka | Vijayan Kuveni Story| Thiru Master

 




ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

தமிழ் இன எதிர்ப்பை பேசும் சிங்கள தலைவர்கள் சுத்த தமிழர்கள்! | Thirunavukarasu Interview | IBC Tamil

 

தமிழ் இன எதிர்ப்பை பேசும் சிங்கள தலைவர்கள் சுத்த தமிழர்கள்! | Thirunavukarasu Interview | IBC Tamil

மரபு ரீதியாக 21 சதவீதமான சிங்களவர்கள் தமிழர்களே. 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய பல சிங்களவ சாதிகள் உள்ளன.



சனி, 29 மார்ச், 2025

முள்ளிவாய்க்கால் அழிவின் பின் சீனாவின் மூன்று முக்கிய நகர்வுகள். காணொலி. I ஊடறுப்பு (Udaruppu)

 

மகிந்தவுக்காக களத்தில் இறங்கிய சீனா.
மு.திருநாவுக்கரசு அவர்கள் நேர்காணல்.
ஊடறுப்பு தள நேர்காணல் காணொலி,


மேலேயுள்ள காணொலி உரையில் கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள் கீழே:

சீனாவின் வளர்ச்சியால் இதுநாள் வரை அமெரிக்காவை தலையாகக் கொண்ட ஒற்றை மைய அரசு இப்போது மீண்டும் இரட்டை மைய அரசாக பரிணமிக்க ஆரம்பித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றாலும் பெரும் அழிவுகளையும் சந்தித்த உலகப் பேரரசுகள், அதன் பின்பு இனி எந்தப் போர் நடந்தாலும் தங்கள் நாடுகளில் நடக்காமல், தாங்கள் பாதிக்கப்படாமல், பிற நாடுகளிலும் பிற கண்டங்களிலும் நடத்திக் கொள்வது என்கிற முடிவை எடுத்தன.

அப்படி நடத்தப்பட்ட ஒரு போர் உக்ரைன் போர். பலவீனமடைந்துவிட்ட ரஷ்யாவை உக்ரைன் போரின் மூலம் அதன் பொருளாதாரத்தை அழித்துவிட முடியும் என்று நினைத்த அமெரிக்காவிற்கும் அதன் ராணுவச் செயலகம் பென்டகனிற்கும் இந்த முன்னெடுப்பு பெரும் தோல்வியைக் கொடுத்திருக்கிறது.

புதன், 19 மார்ச், 2025

2009ல் தமிழ்த் தேசிய தலைவர் தன் குடும்பத்துடன், உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி. - மு.திருநாவுக்கரசு.

 

அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு அவர்கள் லங்கா ஸ்ரீ ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்வில் வழங்கி வரும் தொடர் நேர்காணல். 

இந்த நேர்காணலில் 2009ல் தமிழ்த் தேசிய தலைவர் தன் குடும்பத்துடன், உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி பற்றி விளக்குகிறார். 


ஊடறுப்பு நிகழ்வு நேர்காணல் காணொலி யூட்யூப் இணைப்பு.





திங்கள், 17 மார்ச், 2025

ராவணனை உரிமை கொண்டாடும் சிங்களவர்கள். தடம் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி.

 

தடம் செய்தி ஊடகத்தின் வரலாறு பற்றிய செய்தித் தொகுப்பில், இலங்கையின் வரலாறு பற்றிய விவாதத்தில் மு.திருநாவுக்கரசு அவர்கள் மகாவம்ச நூல் தமிழர்களுக்கு எவ்வளவு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கிறது என்பதையும் அது சிங்களர்களை இப்போதும் வழிநடத்தும் ஒரு நூல் என்பதையும் விளக்குகிறார்.

அதன் தொடர்ச்சியாக ராவணன் என்கிற இந்து இதிகாசங்களின் கதாபாத்திரத்தை சிங்களராக சித்தரிப்பதையும் பற்றி கூறுகிறார்.

பாக் நீரிணைப்பின் வழியில் உள்ள கண்டத்திட்டு தான் ராமர் பாலம் என்று இதிகாசங்களில் கூறப்படுகிறது. ராமர் கதை என்பது நிஜமாக நடந்த ஒன்றாக இல்லாவிட்டாலும், ராமாயண கதையில் வரும் இலங்கை என்பது இலங்கைத் தீவு என்று கொண்டால் அது காலம் காலமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுப்புகள் நடந்து ஆட்சிக் கைப்பற்றல்கள் நடந்து வருகின்றன என்பதை குறிக்கும் ஒரு குறிப்பு எனலாம்.

சிங்களர்களுக்கு காலம் காலமாக வரலாற்று ரீதியாகவே இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்து தங்களை ஆக்கிரமிப்பார்கள் என்கிற வரலாற்று அச்சம் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்போதும் கூட அது உண்மையாகவே இருக்கிறது.

தடம் செய்தி பேட்டியின் காணொலி. யூட்யூப் தள இணைப்பு.



புதன், 12 மார்ச், 2025

பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றி ரணில் விக்கிரமசிங்கே பேட்டி தந்த விவகாரம்.

 

2025 மார்ச் மாத ஆரம்பித்தில் முன்னாள் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலுக்குப் பிறகு, பட்டலந்தை முகாம் குறித்து அவர் கூறிய கருத்துக்களால், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்தும், பட்டலந்தை வதை முகாம் குறித்தும் நாட்டில் அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். 

இதன் பின்னர் பட்டலந்தை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜேவிபி அரசாங்கத்தினால் நாடாளுமன்ற அவைத் தலைவர் பிமல் இரத்திநாயக்கவினால் 2025 மார்ச் 14 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளைக் கடுமையாக நிராகரித்து, அது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் ரீதியான முயற்சி என்று கூறினார். ஆணைக்குழு உருவாக்கப்பட்டது தன்னை இழிவுபடுத்தும் நோக்கத்தால் தூண்டப்பட்டது என்றும், ஆனால் இறுதியில் அந்த இலக்கை அடைய முடியவில்லை என்றும் வலியுறுத்தினார். 

1988-1990 கிளர்ச்சியின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வசதி செய்வதில் தனது பங்கை மட்டுமே அறிக்கை குறிப்பிடுவதாக விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார், இந்த செயல்பாடு நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

லங்கா ஸ்ரீ செய்தி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில், ஊடறுப்பு என்கிற தலைப்பில் நடந்த காணொலி உரையாடலில்,
சமீபத்தில் நிகழ்ந்த இந்த அரசியல் நிகழ்வுகளின் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்கேயின் பங்கு பற்றி, சிங்கள ஒடுக்குமுறையின் தீவிரமான விஷயங்களை பற்றி தெளிவாக்குகிறார் அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு அவர்கள்.


அந்தக் காணொலி யூட்யூப் வலைத்தளத்தில் காணலாம். அதன் இணைப்பு கீழே.

காணொலி:






வெள்ளி, 7 மார்ச், 2025

இந்தியா துரத்திய அதிகார பௌத்தம், இலங்கையில், தன் இந்திய எதிர்ப்பால் தமிழரை அழிக்கிறது - மு.திருநாவுக்கரசு உரை.

 வரலாற்றில், இந்தியா துரத்திய அதிகார பௌத்தம், இலங்கையில், தன் இந்திய எதிர்ப்பால் தமிழரை அழிக்கிறது

என்கிற தலைப்பில்

நிலவரம் தொலைக்காட்சிக்கு வரலாற்று ஆய்வாளர், அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய நேர்காணல்.


யூட்யூப் காணொலி:





செவ்வாய், 4 மார்ச், 2025

அநுரா அரசு கொண்டு வருவதாக சொல்லும் புதிய அரசியல் யாப்பு பற்றி, அதில் சீனாவின் ரகசிய நகர்வுகள் பற்றி.



02 March 2025 அன்று ஊடறுப்பு  இணைய செய்தித் தளத்திற்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டியின் காணொலி. 
இலங்கையில் அநுரா தலைமையிலான அரசு புதியதொரு யாப்பை கொண்டு வருவோம் என்று கடந்த தேர்தலின் போது அறிவித்திருந்தது.
அநுரா அரசு பதவியேற்றும் பெரும்பான்மை பெற்றிருந்தும் இன்னும் அதுபற்றிய நகர்வுகள் எதுவும் பெரிதாக எடுக்கப்படவில்லை.
அத்தகைய புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவாரா அநுர ?
ஏன் புதிய யாப்பு பற்றிய பேச்சு எழுகிறது.
புதிய யாப்பு தேவையா.
புதிய யாப்பு கொண்டு வருவதின் உள்ளே பொதிந்துள்ள சிங்கள நலன்கள் என்ன.
சீனாவின் நலன்கள் என்ன இருக்கின்றன.
தமிழருக்கு புதிய யாப்பு வந்தால் எதுவும் விடிவு காலம் வருமா,

இது போன்ற பல்வேறு கேள்விகளைப் பற்றி ஆராய்ந்து வரலாற்று ரீதியான பதில்களை, தேடல்களை இக்காணொலியில் முன்வைக்கிறார் வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள். 

பேட்டியின் காணொலி:

 ்இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்கள் கீழே குறிப்புகளாக தரப்பட்டுள்ளன.

இலங்கையில் புதிய யாப்பு கொண்டு வருவதாக அநுர அரசு சொன்னாலும் மகாசங்கமும், சிங்கள ராணுவம் அத்தகைய யோசனையை விரும்பவில்லை.

மகாசங்கத்தின் நோக்கம் மாகாண சபை அமைப்புக்களை நீக்க வேண்டும் என்பதும், முஸ்லீம்கள் விகிதாச்சார முறைப்படி அதிக சீட்டுக்களைப் பெறுவதை தடுக்க வேண்டும் என்பதுமே. 

ஜனாதிபதி முறை அரசுக்கும் , ராணுவத்துக்கும் மிகுந்த அதிகாரம் தருவதால் ஜனாதிபதி முறையை ஒழிக்க இருவருமே விரும்பவில்லை.

அநுர அரசு பெரும்பான்மை இருப்பதால் உண்மையிலேயே புதிய யாப்பு உருவாக்குவதில் அக்கறை இல்லை. தேர்தலுக்காக சொல்லப்பட்டதே அது.

இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே பிடி மாகாண சபை அமைப்புகள் தான். அதை நீக்கினால் இந்தியா தீவிரமாகும் என்பதால் அதை நீக்காமலே டம்மியாக வைத்திருந்து மேலும் அதை பலனற்ற ஒரு அமைப்பாக நீர்த்துப் போகச் செய்யவே முயலுவார்கள்.

இப்படியான சிந்தனை சீனாவிடமிருந்து தான் இலங்கை அரசுக்கு தரப்படுகிறது. சீனா தேசிய இனங்களின் உரிமைகளை எப்போதுமே சமமாக மதித்ததில்லை. தனது நாட்டிலேயே அது அவர்களை சீன கட்சிக்கு கட்டுப்பட்ட சில உரிமைகளை கெஞ்சி கேட்டுக்கொள்ளும் அளவிலேயே தான் வைத்திருக்கிறது. அதையே இலங்கையிலும் சிறுபான்மை தேசிய இனங்கள் மேலும் பயன்படுத்த சிங்கள அரசுக்கு சீனா ஆலோசனையும் உதவியும் செய்கிறது.

1984 இந்தியா இலங்கை ஒப்பந்தம், பார்த்தசாரதியால் துருக்கி-கிரேக்கம்-சைப்ரஸ் ஸ்டைல் தீர்வை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டது. துருக்கி ராணுவம் கிரேக்கத்தில் உள்ள 20 சதவீத துருக்கியரை கிரேக்கர்கள் துன்புறுத்துவதை படுகொலை செய்வதை தடுக்கும் விதமாக கிரேக்கத்தில் இறங்கி துருக்கியரை பாதுகாத்தது. இன்றுவரை அந்த ராணுவம் கிரேக்கத்தில் இருக்கிறது. இந்திராகாந்தி படுகொலைக்குப் பின்பு அனைத்தும் மாற்றப்பட்டு தலைகீழாக யோசிப்பவர்கள் அங்கே வந்ததால் அது கைவிடப்பட்டுவிட்டது.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள் யாரிடமும் தற்போது இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு தமிழர்களை காப்பது என்பதே கிடையாது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் கடல் பகுதி சார்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இல்லை. நேரு - பணிக்கர் காலத்தில் துவங்கி அவ்வாறு தான் இருந்தது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் கொண்ட கடல்சார் வெளியுறவுக் கொள்கைகளே இந்தியாவுக்கு தேவையான வெளியுறவுக் கொள்கையின் முன்மாதிரியாகும். ஆனால் இன்றுவரை அதுபற்றி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவே இல்லை.

ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவிட்டால் பாக் நீரிணை சீனாவின் வசமாகிவிடும். அப்படி நிகழும்போது அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்தியாவை இரண்டு மூன்று துண்டுகளாக உடைக்கும் நகர்வுகளை சீனாவால் நிறைவேற்ற முடியும். 



ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

பாதாள உலக கும்பலை வளர்த்துவிட்டவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

 


22,பிப்ரவரி, 2025 அன்று ஊடறுப்பு ஊடகத்திற்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டி.

இலங்கையில் சமீபத்தில் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப் பெற்ற துப்பாக்கிச் சூட்டில்  சஞ்சீவா குமர சமரத்னே என்கிற பாதாள உலகின் தலைவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னாலுள்ள பாதாள உலக கும்பலின் பின்னணி, அதன் அரசியல், சமூக காரணங்களை விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.

இலங்கையில் பாதாள உலகை வளர்த்துவிட்டவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.
ஆட்கள் கடத்தல், படுகொலைகள் செய்தல் போன்ற காரியங்களுக்கு பாதாள உலகத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
இந்த நிழலுலகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சிங்களர் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு , கோத்தபய அரசால் அவர்களுக்கு அதுவரை உதவியாயிருந்த இந்த நிழலுலக தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 காணொலி:


பாதாள உலக கும்பலை வளர்த்துவிட்டவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | UDARUPPU | Ganemulla

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

அறகலய அரசியல் : தோற்றமும் மாற்றமும் (ஈழப் போராட்டம் முதல் ஜேவிபி வரை) - மு.திருநாவுக்கரசு உரை


நாள்: 09.02.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : இரவு 8.00 மணி (இலங்கை நேரம்)

அறகலய அரசியல் : தோற்றமும் மாற்றமும் (ஈழப் போராட்டம் முதல் ஜேவிபி வரை)

திரு. மு.திருநாவுக்கரசு, "ஈழத்தமிழர் அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது?" எனும் தலைப்பில் நிகழ்நிலையில் (Zoom) உரையாற்றியதன் காணொலி.

இலங்கையில் 2022ல் சிங்கள மக்களால் நடத்தப்பட்ட அரகலய வெகுஜன போராட்டம், கோத்தபய ராஜபக்சேவை ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டியதுடன் ராஜபக்சே குடும்பமே அரசியலை விட்டு வெளியேறும்படி செய்தது. 

ஆனால் அந்தப் போராட்டம் இலங்கைக்கு வேறு எதுவும் மாற்றங்களைக் கொண்டுவந்துவிடவில்லை. இந்த அரகலயப் போராட்டம் ஏன் தோன்றியது, அதன் விளைவுகளை வைத்து அதிகாரத்தை யார் கைப்பற்றியது போன்ற விஷயங்களை ஆய்ந்து விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.

இவ்வுரையில் மேலும் அவர் கூறிய கருத்துக்கள் பற்றிய குறிப்புகள் கீழே...

ஈழ யுத்தத்தை முன்னின்று நடத்திய யுத்த பிரபுக்கள் மூன்று பேர்.

சந்திரிகா குமார துங்கா, மஹிந்த ராஜபக்சா, கோத்தபய ராஜபக்ச. 

அதிகார பதவிகளில் இருந்துகொண்டு, ராணுவ வாதம் பேசி, யுத்தத்தை, இறுதியில் இனப்படுகொலையைச் செய்தார்கள்.

இந்த மூன்றுபேரைத் தவிர இவர்களோடு இந்த எல்லா காலங்களிலும் இவர்களுக்கு உடந்தையாக கூட்டாக நின்றிருந்த, சிங்கள மக்களிடம் போருக்கான ஆதரவைப் பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்த ஜேவிபி நாலாவது யுத்த பிரபுவாகும். 

ஆனால் தற்போது அந்த உடந்தையை மறைத்துக் கொண்டு இப்போது மக்களிடையே ஜனநாயக முறையில் நம்பிக்கை பெற்று அதிகாரத்தை பிடித்து ஜனநாயக முகம் காட்டுகிறது.

அடிமைகளிடம் சமாதானம் பேச முடியாது. விடுதலை பெற்ற மக்களிடம் மட்டுமே சமாதானம் சமமாக பேசமுடியும். ஈழ மக்கள் தோல்வியுற்று, அடிமைப்பட்டு இன்று கிடக்கிறார்கள். அவர்களிடம் போய் அநுரா பேசும் சமாதானம், அமைதி எல்லாம் ஆதிக்க சிங்களம் தமிழர் மேல் திணிக்கும் சமாதானமே.

ஜேவிபியும் அநுராவும் கம்யூனிச முகமூடிகள் அணிந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் சிங்கள இனவாதத்தை போற்றிப் பாதுகாத்தவர்களாக, பேணி வளர்த்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.

இன்றுவரை இனப்படுகொலைக்கான ஒரு விசாரணைக் குழுவைக் கூட வைக்க பேசாமல், மக்களே அதை மறந்துவிடுங்கள் என்று நயவஞ்சகமாக அமைதி பேசும் அநுராவின் வார்த்தைகள் அதற்குச் சான்று.

காணொலி:



வியாழன், 6 பிப்ரவரி, 2025

இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அச்சத்தில் அனுர.

 

பிப்ரவரி 6, 2025 அன்று லங்காஸ்ரீ ஊடகத்தில், ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டி.

காணொலி:



வியாழன், 30 ஜனவரி, 2025

இலங்கை அரசின் கடல் சார் வெளியுறவுக் கொள்கையும் அதனால் அழிவுக்கு உள்ளாகும் ஈழத் தமிழரும். - மு.திருநாவுக்கரசு உரை.


 

ஜனவரி 30, 2025 அன்று லங்காஸ்ரீ செய்தி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்காக மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டியின் காணொலி, யூட்யூபில் கீழே பார்க்கலாம்.

 

காணொலி:

இலங்கையின் பல பகுதிகளை கைப்பற்றிய சீனா I ஊடறுப்பு (Udaruppu)


காணொலியில், மு.திருநாவுக்கரசு அவர்களின் உரையின் முக்கிய கருத்துக்கள் குறிப்புகளாக கீழே தரப்பட்டுள்ளன. 

உரைக் குறிப்புகள்:

உலக அளவில் இலங்கைமேல் பிறநாடுகள் ஈடுபாடு கொள்ள முக்கிய காரணம் அதன் புவியியல் அமைவிடமே.

இந்தியப் பெருங்கடலையும், அக்கடலில் பெருமளவு வாணிகம் மற்றும் அதிகாரத்தையும் கைப்பற்ற இலங்கையை

ஒரு முக்கிய கேந்திரமாக கொள்ளமுடியும். 


சாணக்கியன் சொன்னது 

உங்கள் எதிரியின் எதிரி, உங்களுக்கு நிரந்தர நண்பன்.

உங்கள் நண்பனின் நண்பன், உங்களுக்கு அவரது நலன் சம்பந்தப்படும்போது மட்டுமே நண்பன்.

உங்கள் அண்டை நாடு உங்களுக்கு எதிரி. அண்டை நாட்டின் அண்டை நாடு உங்களுக்கு நண்பன்.

சிங்களவருக்கு இந்தியா அண்டை நாடு. சிங்களவரின் எதிரி இந்தியா. இந்தியாவின் எதிரி சீனா. சிங்களவரின் நண்பன் சீனா.

உலகில் எந்த நாட்டை எடுத்தாலும் இந்தியாவைத் தாண்டி அது இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாது. சீனா தவிர.


ஈழத்தமிழர்கள் தங்கள் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இப்போதாவது தெளிவாக கண்டுகொள்ள வேண்டும்.


இன்றைய சூழலில், அரசற்ற ஒரு தேசிய இனம் நேரடியாக இன்னொரு வெளி அரசின் உதவியின்றி, தானே விடுதலையடைவது சாத்தியமில்லை.


குர்தீஸ் போராட்டத்தில் சுற்றி இருந்த எந்த இஸ்லாமிய நாடுகளும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அவர்கள் அமெரிக்காவை நாடினார்கள். இனப்படுகொலைக்கு உள்ளாவதை விட ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது  மேல் என்பதால் குர்தீஸ் மக்கள் இனப்படுகொலையாவதை தடுக்க அமெரிக்காவை நாடினர்.


ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. திரிகோணமலை துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை இந்த செயற்கைத் துறைமுகம் வரலாற்றில் பதிலீடு செய்திருக்கிறது.

இந்திய அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கொள்கை வகுப்பாளர்கள் ஆரியர்களின் வேதகால நம்பிக்கைகளை வைத்தே சிந்தித்ததால் வெளியுறவுக் கொள்கைகள் அந்த அடிப்படையிலேயே உருவாயின.

ஆரியர்களின் வேதகால நம்பிக்கைகளின்படி கடல் கடப்பது பாவமாகும். ஆரியர்களின் சக்கரவியூகம், அசுவமேதயாகம்,  ராஜசூயயாகம் போன்ற எவற்றிலும் கடல் சம்பந்தப்பட்டிருக்கவே செய்யாது.

ஆரிய அரசர்கள் செய்த அசுவமேதயாகத்தில் யாகம் செய்து கட்டவிழ்த்துவிடப்படும் குதிரை எந்தெந்த ராஜ்ஜியங்களின் எல்லைகளைத் தொடுகிறதோ அந்தந்த நாடுகளுடன் போர் செய்து வெற்றி பெறுவார்கள். அல்லது அந்த நாடுகளே தானே சரணடைந்துவிடும்.

காந்தி கடல் கடந்து லண்டனுக்குப் படிக்கப் போவது தடுக்கப்பட்டது கடல் கடப்பது பாவம் என்ற நம்பிக்கையால் தான். பின்னர் அவர் அதை வேறு சில சத்தியங்கள் செய்து கடந்து போனார்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டை ஆண்ட சோழப் பேரரசினர் தான் கடல் சார் கொள்கையை இந்தோ-பசிபிக் பகுதியை மையமாகக்  கொண்டு உருவாக்கினார்கள். அவர்கள் சுமத்ரா , ஜாவா வரை கடலில் சென்று நாடுகளை கைப்பற்றி ஆட்சி புரிந்தார்கள்.

2012ல் ஒபாமா இந்தோ-பசிபிக் கொள்கையை இதன் பின்னணியிலேயே உருவாக்கினார். சீனாவை கட்டுப்படுத்த.


இந்தியா 1947வ் சுதந்திரமடைந்த போது அதன் வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தவர்கள் நேரு, கிருஷ்ண மேனன், பணிக்கர்,  ஆகிய உயர்சாதியினரே.

இவர்கள் இந்திய வெளியுறவுக் கொள்கையை கடல் சார் கொள்கையாக(Oceanic policy) உருவாக்க கவனம் செலுத்தவில்லை. 

மாறாக, ஆரியர்களின் வேதகாலக் கொள்கைகளான நிலவழிக் கொள்கைகளையே பின்பற்றினார்கள். 

இக்கொள்கைகளினால், இந்திய ஆட்சியாளர்கள் அண்டை நாடான இலங்கையை  நூறு சதவீதம் நட்பு நாடு என்றே கணித்தார்கள். அது நூறு சதவீதம் தவறான கணிப்பாகும்.

இதே 1948 காலகட்டங்களில் வல்லபாய் படேல், ராணுவ தளபதி வைத்யா போன்றோர் இலங்கையை போரிட்டு பிடித்து இந்தியாவின் மாகாணமாக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தனர்.


ஆரம்பத்திலிருந்தே இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு வலையத்தில் உள்ள நாடு என்றேயும், நட்பு நாடாகவும் பிழையாகக் கணித்ததாலேயே இந்தியாவால் இன்றுவரை இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டுவர முடியவேயில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை பற்றிய பார்வையில் மாற்றம் வந்தது. அதை நிராகரித்து மீண்டும் பழையபடி இலங்கையை நட்பு நாடாகக் கருதவைக்க ஜே.ஆர.ஜெயவர்த்தனா ராஜதந்திரங்கள் பல செய்தார். அதன் விளைவாக இந்தியா மீண்டும் இலங்கையை நட்பு நாடாக பார்க்கும் பழைய பார்வைக்குள்ளே போய்விட்டனர்.


இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்த பேச்சுவார்த்தையின் போது பிரபாகரன் அதை மறுத்தார். அப்போது பேசிய ராஜீவ்காந்தி அவரது தோளில் தட்டி இந்த ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தற்காலிகமல்ல. பின்னால் படை இறக்கி அதை நிரந்தரமாக்கவே நான் இதைச் செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னால் சிங்களத் தலைவர்களின் ராஜதந்திர சாமர்த்தியத்தால் அந்த ஒப்பந்தமே கிழித்து எறியப்பட்டது.

13ஆவது சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியாவையும், தமிழரையும் மோதவிட்டு புலிகளுக்கு எதிரிகளாக இந்தியாவையே மாற்றினார். 

இந்தியாவை 13ஆவது திருத்த ஒப்பந்தம் சிக்கலில் கொண்டு மாட்டியுள்ளது. 13ஆவது ஒப்பந்தம் கைவிடப்பட்டால் இந்தியாவுக்கு இலங்கையின் மேல் எந்தப் பிடியும் கிடையாது. அது சிங்களரின் வெற்றி.

ஈழத்தமிழருக்கு இந்தியா இல்லையென்றால் எந்த விமோசனமும் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதை நன்கு புரிந்திருந்தனர் சிங்களர்கள்.

ஈழப்போராட்டத்தின் தளமாக பாக் நீரிணையும் , தமிழ்நாடும் விடுதலைப் புலிகளுக்கு இருந்தன. சிங்களரின் தந்திரத்தால் அதை ஈழத்தமிழரிடமிருந்து வெட்டி விட்டார்கள்.

இந்த 2009 இனப்படுகொலையால் நன்மையடைந்தவர்கள் யார் எனில், மேற்குலகம் மட்டுமே.
அமெரிக்கா இலங்கை சீனாவை நோக்கி மிக நெருங்கினால் அதைப் பிடித்திழுக்க போர்க்குற்ற விசாரணை என்கிற ஆயுதத்தை எடுக்கும். இலங்கை அமெரிக்காவிடம் பணிந்து போக ஆரம்பித்தவுடன் அந்தப் பேச்சை விட்டுவிடும். இந்தியாவும், ஈழத்தமிழர்களும் 2009 இனப்படுகொலையை தங்கள் கையிலெடுக்கத் தவறிவிட்டன.

இந்தியா இலங்கையை தமிழர் வாழும் இலங்கை , சிங்களர் வாழும் இலங்கை என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்காமல் ஒரே இலங்கை, தனது நட்பு நாடு என்று மட்டுமே பார்த்தால் சிங்கள அரசின் முதுகில் குத்தும் துரோகச் செயல்களைத் தான் தொடர்ந்து எதிர் கொள்ளும். இலங்கையிடம் எந்நாளும் இந்தியா தோற்றபடியே தான் இருக்கும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலன்றி இந்தியா இந்திய-பசிபிக் கடல் பகுதியில் சீனாவிடமிருந்து தப்பிப்பது கடினம்.

அதிகம் பார்க்கப்பட்டவை: