வெளியுறவுக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளியுறவுக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 செப்டம்பர், 2025

கட்டமைப்புத் தேசியவாதமும் தமிழீழத் தேசிய ஒருமைப்பாடும் - மு.திருநாவுக்கரசு.

10-09-2025

ஆதிக்க சக்திகள் செய்யும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்கிற அழித்தல் தத்துவத்திற்கு எதிர்வினையாக உருவாகிய விடுதலை தத்துவம் கட்டமைப்புத் தமிழீழத் தேசிய எழுச்சியாகும். தேசியமென்பது சிதறு தேங்காயடி விளையாட்டல்ல . தேசியமென்பது ஐக்கியம், ஒருமைப்பாடு, கூட்டுச்சேரல்,  அணிசேரல் என்ற அணுவிலிருந்து அண்டம் வரையான அனைத்திலும் இணையும் ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது.


  
 

ஒரு மக்களினத்தை அழிப்பதற்கு முதலில் அவர்களின் பண்பாட்டையழித்தல் , அத்துடன் கூடவே அவர்களின் தேசியத் தன்மையை  அழித்துவிடவேண்டுமென்ற உணர்வுக்குள் ள்ள நிலைப்பாட்டின் கீழ்தான் காலனி ஆதிக்கம், ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் தமது கொள்ளைக்கார, கொலைகார அரசியலை நடத்தியதாக விடுதலை வீரனும், சிந்தனையாளருமான அமில்கா கப்ரயல் (Amílcar Cabral)

 கூறினார். காலனித்துவம் ஆசிய, ஆப்பிரிக்க இனங்களின் மீது நடத்திய இத்தகைய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஆதிக்கமானது, இந்த ஆதிக்க அரசியலை உணர்வுபூர்வமாக பல பரிமாணங்களிலும் கையாளுகிறது. 


தேசியம் - ஒடுக்கப்படும் மக்களின் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆயுதம்

ஆதிக்க சக்திகளுக்கெதிரான பலம் பொருந்திய ஆயுதம்

தேசியம்.  அது மக்களைத் திரளாக்கி, மக்களை எதிரிக்கெதிரான பலம் பொருந்திய ஆயுதமாய் நிலைநிறுத்தி விடுகிறது.  அது மக்களை, மக்களுக்கு அரணாக்கிறது. அந்தத் தேசியத்தின் டித்தளம் பண்பாடும், வாழ்க்கை முறையும்,  ஒருமைப்பாடும், சனநாயக முறைமையுமாகும் .  

தேசியமும், தேசிய  ஐக்கியமும், தேசியவொருமைப்பாடும் இல்லையேல் மக்களுக்கென்று பாதுகாப்பொன்றுமில்லை.  ஆதலால் தேசியம் எப்போதும் முதல் நிலையில் மக்களுக்கான பாதுகாப்பரணும், பாதுகாப்புக் கவசமுமாய் இருப்பதோடு , கூடவே எதிரிக்கு திரான நீட்டப்படும் ஈட்டி யுமாகவும் இருக்கிறது. இவ்வகையில் அது தடுப்புக் கவசமாகவும், ஆயுதமாகவும் ஒரே நேரத்தில் செயல்படுகிறது.  

தமிழ்த் தேசியத்தைச் சிதறு தேங்காயாக்கி உடைக்கும் பணியை  எதிரியின் சார்பில் தமிழ்த் தலைவர்கள்  நிறைவேற்றி வருகிறார்கள். களத்திலும், புலத்திலுமுள்ள தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களும், பண்பாட்டாளர்களும் இப்பிரச்சனையை உணர்வு பூர்வமாகப் புரிந்து, தமிழ்த் தேசியத்தைப் புதிய சிந்தனையுடன் கட்டமைப்புச் செய்ய வேண்டும். 


தேசியத்தில் மக்கள், நிலம், மொழி, பண்பாடு, வரலாறு என்பன எவ்வாறு முக்கியமான அம்சங்களோ அவ்வாறே அத்தேசியத்திற்கான கட்டமைப்பும் முக்கியமான அம்சமாகும். காணப்படும் யதார்த்த பூர்வமான களநிலைக்குப் பொருத்தமாக , உலகளாவிய உள்நாட்டு, வெளிநாட்டு அரசியலுக்குப் பொருத்தமாகத் தேசியம் எப்பொழுதும் இடையறாது கட்டமைப்பு ரீதியாகப் புதுப்பிக்கப்பட்டு கொண்டேயிருக்கவேண்டும்.  


தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டு ரசியல்

தற்போது ஈழத் தமிழர்கள் மத்தியிலுள்ள துயரகரகமான நிலைமை ன்னவெனில், தமிழ்த்தேசியத்தைச் சிதறடிப்பதையே தேசிய ரசியலாகத் தமிழ்த் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் தமிழ்த் தேசியமானது தற்போது சிதறடித்தல் என்கின்ற பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. இதனை அரசியற் கோட்பாட்டு ரீதியாகத் தேசிய நாசகாரச் செயல் , அரசியல் நாசகாரம் ( Political Vandalism) என்றழைக்கலாம்.  

இத்தகைய நாசக்கார அரசியலுக்குப் பதிலாக தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டு ரசியலை முன்னெடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத் தமிழரினதும் கடமையாகும். எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் ஒவ்வொரு சனநாயகவாதியினரும் பொறுப்பும் , கடமையும், பணியுமாகும். 

யாரையும் திட்டிக் கொண்டிருப்பதையும், வசைபாடிக் கொண்டிருப்பதையும், தமிழ்த் தேசியர்கள் இலட்சியமாகக் கொண்டிருக்க முடியாது. திட்டுவதையும், சேற்றை வாரிவீசிக் கொண்டிருப்பதையும் தேசியவாதமா க்கிவிடக்கூடாது. சிதறு தேங்காயடித்தலையும், சேற்றை வாரி வீசலையும்  தேசியமாக்கிவிட்ட ஒரு காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் சேற்றுப் புழுக்களாய் நெளியுமொரு காலகட்டத்தில் வாழ்கிறோமென்கிற துயர்தோய்ந்த இன்றைய வரலாற்றுக் கட்டத்தைப் புறந்தள்ளமுடியாது.

 

எனவே இன்றைய நிலையில் தமிழ்த் தேசியத்தை  புதிய பரிமாணத்துடன், புதிய சிந்தனையுடன் புதிய கட்டமைப்புச் செய்ய வேண்டும். இதற்கு உலகளாவிய இன்றைய உடனடி யதார்த்தத்தையும், சர்வதேச அரசியலையும், உள்நாட்டு, வெளிநாட்டு  அரசியலையும், ஈழத் தமிழரின் உள்ளக அரசியலைத் தாயகம், புலம்பெயர் தேசம் ஆகிய இரு பரிமாணங்களிலும் யதார்த்தபூர்வமாகக் கணக்கிலெடுத்துச் செயற்பட வேண்டும். ஈழ மண்ணில் ஈழ நிலமும், அதன் கடல் சார்ந்த பிரதேசத்தையும் உள்ளடக்கிய சிந்தனையுடன்  அகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் ஒரு புதிய கட்டமைப்பு வாதத்தை ருவாக்க வேண்டும்.  


தமிழ் அரசியலை அறிவியல்மயப்படுத்துதல் 

முதலாவதாக ஈழத் தமிழரின் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும். எழுமாத்திர அரசியலையும்,  தான்தோன்றித்தனமான அரசியலையும் புறந்தள்ளி, முற்றிலும் புத்தி பூர்வமான, அறிவார்ந்த திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.  

இதற்குத் தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்துதல் என்கின்ற கோசம் முதலில் முன்னெடுக்க வேண்டும். இதற்கு இரண்டு விடயங்கள் மிகவும் அடிப்படையானவை.  

முதலில் தமிழர் ரசியலை சனநாயக மயப்படுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தம்மை சனநாயக மயப்படுத்த முயற்சிக்க வேண்டும்.  கட்சி அமைப்புகளில் சனநாயக அம்சங்களையும், நடைமுறைகளையும் இவர்கள் பின்பற்றத் துவங்க வேண்டும்.  சனநாயகத்தின் கூரிய முதுகெலும்பு, வெற்றிக்கும், தோல்விக்கும் பொறுப்பேற்றலாகும்.  

தாங்கள் முன்னெடுத்த விடயங்களில் தோல்வியுறும்போது, அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப்  பதவி விலகல் செய்வதை தமிழ்த் தலைவர்கள் ஒரு சனநாயக நடைமுறையாகக் கொள்வதன் மூலம் தகுதியான புதியவர்களின் வருகையையும், போராட்டத்தை புதிய பலத்தோடு சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான பாதையையும்  திறக்கலாம்.

 

இந்தியாவின் முன்னாள் பிரதமராயிருந்த  திருமதி இந்திரா காந்தி 1970களின் மத்தியில்  தான் மேற்கொண்ட அவசரகாலச் சட்டத்தின் (Emergency) கீழான ஆட்சியில் இழைக்கப்பட்ட அடக்குமுறைகளையும், அராஜகங்களையும், தவறுகளையும்,  அரசு மேற்கொண்ட கட்டாயக் கருச்சிதைப்பில் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளையும், பிற்காலத்தில் தாம் செய்த பெருந்தவறாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தான் செய்த தவறுகளுக்காக 1979 டிசம்பர் பொதுத் தேர்தலில் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் இந்திராகாந்தி. அவரை மன்னித்து 1980 ஆம் ஆண்டு சனவரியில் அவரை மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கச் செய்தனர் மக்கள்.  தமிழினத் தலைவர்களும் தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினால் ஈழத்தமிழ் மக்கள் நிச்சயம் மன்னிப்பார்கள். திருந்தி மன்னிப்புக் கோருதலும், மக்கள் அதனை மன்னித்தலும் ஒரு சனநாயக நடைமுறைதான். 

எப்படியோ தற்போது ஈழத் தமிழ் அரசியற் களத்தில் முற்றிலும், பல்வேறு வழிகளிலும் சனநாயக மயப்படுத்தப்பட வேண்டும்.  இது உடனடியான, இலகுவான காரியமல்ல என்பது வெள்ளிடை மலை. ஆயினும் அதனை நோக்கி முன்னேற இப்போது அவசரமான கட்டமைப்புகளை ருவாக்க வேண்டியது வசியம்.

 

உருவாக்கப்படவேண்டிய அரசியல் உட்கட்டமைப்புகள்

முதலாவதாக எத்தகைய அரசியல் தீர்மானங்களையும் அறிவார்ந்த அறிக்கைகளுக்கு ட்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்கள் மத்தியில்  அரசியல் தீர்மானங்களை ஒட்டி அறிக்கைகள் தயாரிப்பதற்கான ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்க வேண்டும்.  இவர்கள் கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்டு ஒரு விடயத்தை முற்றிலும் அறிவார்ந்த ஆய்வுகளினூடாக நேர்மையுடனும், விசுவாசமாகவும்  முன்வைக்க வேண்டும்.  ஊடகங்கள் இவற்றைப் பொறுப்புணர்வுடன் மக்கள் மத்தியிலெடுத்துச் செல்ல வேண்டும்.  

நமது அரசு கொண்டுவரும் ஒரு அரசியற் தீர்மானமென்றால் அதனை ஆய்வுக்குட்படுத்தி அறிக்கை  தயாரிக்க வேண்டும். அப்படிச் சமூகத்திலெழக்கூடிய அரசியல், பொருளாதாரம், மூலவளம், சாதி, மத ,சமூகப் பிரச்சினைகள், இயற்கை  அழிவுகள், கட்சிகளுக்கிடையே அல்லது உட்கட்சிக்குள்ளே நடக்கக்கூடிய பிரச்சினைகள், முரண்பாடுகள் என அனைத்து சிக்கல்களையும் அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்தி அறிக்கை  தயாரிக்கும் ஒரு மையக் குழு உருவாக்கப்பட வேண்டும். இது தமிழ் தேசியத்தைச்  சரிவர இயக்குவதற்கேற்ற இருதயமான மைய விடயமாகும்.

 

இதில் அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் போன்ற பலதரப்பினரின் கூட்டுப் பங்களிப்பு தலையாயது. இதனை முற்றிலும் செயல் பூர்வமான பொறிமுறை அமைப்புக்கேற்ப கட்டமைப்புச் செய்ய வேண்டும். இந்த ஆய்வறிக்கைக் குழுவுக்கு அனுசரணையாக மும்மொழி கொண்ட மொழிபெயர்ப்புக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும். 

 

இவையிரண்டுக்கும் அனுசரணையாக ஒரு வெளியீட்டுக் குழு உருவாக்கப்பட வேண்டும். அந்த வெளியீட்டுக் குழுவே அச்சு வெளியீடுகளையும், ஊடகங்களைக் கையாளும்  அதிகாரம் கொண்டதாகவிருக்கவேண்டும்.  இவை மூன்றும் தனித்தனியே சுயாதீனமானவையும் கூட்டானவையுமாகவிருக்கவேண்டும். 

 

இப்படியே புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக மேற்குலகில் மேற்குலக நாடுகளைக் கையாளவல்ல ஒரு செயற்பாட்டுக்குழு உருவாக்கப்பட வேண்டும். அது ஆய்வு செய்தல், கொள்கை வகுத்தல் போன்ற பணிகளை முதற்தரமாகச் செய்ய வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென ஒரு தாய், தந்தை அணியை உருவாக்க வேண்டும் .

 

இங்கு இரண்டு இராசதந்திர அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்று குறிப்பாக மேற்குலக நாடுகளையும் ஏனைய நாடுகளையும் கையாள்வதற்கு. இரண்டு இந்தியாவையும், தமிழகத்தையும் கையாள்வதற்கு. இந்தியாவும், தமிழ்நாடும் ஏன் தனித்து நோக்கப்படவேண்டும் என்றால் ஈழ விடுதலை பாக் சந்தியைத் தாண்டி தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் காலூன்றும் பலத்தின் மூலமும், அங்கிருந்து பெறப்படும் ஆதரவுகளின் மூலமே ஈழவிடுதலை உலகளாவிய அளவில் ஒரு நிச்சயமான தன்மையை அடையும்.  


விடுதலை இயக்கத்தின் மீதான தடைகளை நீக்க பாடுபடுதல்


மேற்குலக நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகளும், வட அமெரிக்காவில் இரண்டு நாடுகளுமென முப்பது நாடுகளின் தடை பட்டியலில் விடுதலைப் புலிகள் இணைக்கப்பட்டுள்ளார்கள் . இது வெறுமனே புலிகளுக்கெதிரான தடைமட்டுமல்ல. கூடவே அது ஈழப் போராட்டத்திற்கெதிரான தடையும், மக்களின் தேசிய வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு திரான தடையுமாகும். இந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் மீதான தடைகளை நீக்குவது ஒரு முக்கியமான பணியாகும். 

ஆசியாவில் மூன்று நாடுகளில் விடுதலைப் புலிகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள  இயக்கமாகும். அவை இலங்கை ,  இந்தியா, மலேசியா. இந்தத் தடையை நீக்க அனைத்து மட்டங்களிலும் நாம் முயற்சி செய்ய வேண்டும். இவற்றை வெறும் கற்பனையில் அல்லது எழுமாத்திரத்தில், அல்லது முன்-கற்பிதத்தில் கையாள முடியாது. விஞ்ஞானபூர்வமான சர்வதேச அரசியல் நடுவர்களுக்கூடாகச் சாத்தியக் கூறுகளை ஒருங்கு திரட்டிக் கையாள வேண்டும். இவற்றிக்கு அரசியலறிவும், பாண்டித்தியமும் அவசியம். வெறும் எதிர்ப்புக் குரல்கள் எதிரிகளை உருவாக்குமே தவிர நண்பர்களை உருவாக்காது. அழிவைத் தருமே தவிர மாற்றத்தையோ ஆக்கத்தையோ தராது .  

எல்லாவற்றிற்கும் ரமூட்டக்  கூடிய வகையில் சிறப்பான தகவல் ஊடக மையத்தை ருவாக்க வேண்டும். அந்தத் தகவல் மையம் அல்யஜீரா போன்ற  ஒரு நம்பகரமான, திறமையான ஊடகமாகச் சுயாதீனமாக நடத்தப்படவேண்டும். ஈழத் தமிழரின் போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் இவ்வூடகம் அதிகாரபூர்வமாக எடுத்துச் செல்ல வேண்டும்.   இத்தகைய உயிரோட்டமான செயல்களைச் செய்யாமல் மேற்கொள்ளப்படும் எத்தகைய ஆர்ப்பரிப்புகளும், ஆரவாரங்களும் பயனற்றுப் போகும்.  


தியாகிகளையும், அவர் சந்ததிகளின் தியாகங்களையும் உயிரோட்டமாக கொள்ளுதல்.

தியாகங்களை உயிரோட்டத்தோடு மக்கள் மையப்படுத்தாதுவிட்டால் வெறும் கல்லறைக் கொண்டாட்டங்களாக மட்டும் வைத்திருந்தால்  அவை கல்லறைக்குள் முடங்கி ஆளப் புதைந்து போய்விடும். தியாகங்களைக் கல்லறைப் பண்டங்களாகவல்லாமல் தியாகங்களுக்கு யிரூட்ட வேண்டுமென்றால் மக்கள் மயப்பட்ட அரசியல் உணர்வுகளினாலும், அதற்கான அரசியல் முன்னெடுப்புகளினாலுமே அது சாத்தியம். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அரசியல் வெற்றிகளினாலும் முன்னெடுப்புகளினாலும் அவை உயிரூட்டப்பட வேண்டும். வெறும் கல்லறை கொண்டாட்டங்களாலல்ல.  

இங்கு தியாகம் என்று சொல்வது போராளிகளை மட்டுமல்ல;  கூடவே படுகொலைக்குள்ளான மக்களின் வாழ்விழப்பையும், அவர்களின் சந்ததியினர் படும் துயரங்களையுமாகும்.  மரணம் இறந்தவரோடு போய்விடலாம், ஆனால்  அவரது மரணத்தைச் சுமக்கும் உயிரோடுள்ள அன்புக்குரியவர்களின், உறவினர்களின்

நாளாந்தத் துயரமும் பெருந் தியாகம்தான்.  

அதாவது பொதுவாக  வாழ்வில் இறந்தவரின் பொறுப்பு அவரது மரணத்தோடு முடிவடைந்து விடுகிறது. இறந்தவரின் கடமைகளையும், பணிகளையும் சுமக்க வேண்டிய பொறுப்பு அவரின் வாரிசுகளுக்குண்டு.  இறந்தவர்களோடு தியாகம் முடிவடைந்து விடுவதில்லை;  அதை சுமப்பவர்களோடு தியாகம் நீள்கிறது. இந்நிலையில் மிகுந்த பொறுப்புணர்வுடன் கல்லறைகளுக்குள்ளிருக்கும் தியாகிகளையும், அவர்களின் நீட்சியான மக்களின்  தியாகங்களையும் ஒருங்கு சேர முன்னெடுக்கவல்ல அரசியற் சிந்தனை வேண்டும்.   

குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிற் காணப்படக்கூடிய சனநாயகச்சூழல் இவற்றை விரைவாகப் பெரிதாக முன்னெடுக்க அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. இந்நிலையில்  தமிழ்த் தேசியச் சிதைவுக்கான கோழிச் சண்டைகளைக் கடந்து தமிழ்த் தேசியத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான கட்டமைப்புகளை ருவாக்க வேண்டும்.  


ஜே.வி.பியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

ஈழத் தமிழர்கள்  ஜே .வி. பி. யிடமிருந்து  ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியுண்டு.  அவர்கள் 1971 ஆம் ஆண்டு ஓர் ஆயுதப் போராட்டத்தை நடத்தி 14, 000 -- 20, 000 இளைஞர் யுவதிகளை இழந்தார்கள். பின்பு 1987 -- 89 ஆம் ஆண்டுகளில் 1,00, 000 -- 1,20, 000 இளைஞர் யுவதிகளை இழந்து இரண்டு ஆயுதப் போராட்டங்களிலும் படுதோல்வியடைந்தனர்.   

1971 ஆம் ஆண்டு ஜேவிபி யினர்  கடல் கடந்து வடகொரியாவிருந்து கப்பல் வழியாக ஆயுதம் கடத்துவதற்கெடுத்த முயற்சி தோல்வி முடிந்தது.  ஒரு தீவுக்கு ஆயுதப் போராட்டம் அதிகம் பொருத்தமுடையதல்ல என்பதை நடைமுறையில் முதற் தரமாக அவர்கள் கண்டு கொண்டாலும் இரண்டாம் தரமும் ஏற்பட்ட தோல்வியின் பின்பு அவர்கள் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து ஆயுதங்களுக்குப் பதிலாக இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியைக் கைப்பெற்றும் கலையில் வெற்றி பெற்றார்கள். சிங்கள மக்களை இனவாதத்தால் அணி திரட்டி ஆட்சியைக் கைப்பற்றுதல் என்கின்ற வித்தையை அவர்கள் புரிந்து கொண்டார்கள். மேலும் சிங்கள இனவாதத்தை முன்னெடுப்பதன் மூலம் மக்களை தெளிவாக அணி திரட்டலாமென்ற முயற்சியில் அவர்கள் முன்னணியிலுள்ளார்கள் .
 

இந்தியாவிடமிருந்து இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற கச்சதீவுக்கு எந்தவொரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரும்  அரசியற் பரிமாணத்துடன் இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை பயணித்ததே கிடையாது. ஆனால் அண்மையில் இலங்கை சனாதிபதி  அநுரா, கச்சதீவுக்கு. ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டு கடல் எல்லையையும், வானெல்லையும், தரை எல்லையையும்  பாதுகாக்கப் போவதாக சிங்கள இனவாதத்தின் பெயரால் குரல் எழுப்பி சிங்கள இனவாதத்தின் கதாநாயகனாய்  சிங்கள மக்களின் மனங்களிலொரு  தேசியக்  கதாநாயகனாய் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று எழும் குரல்களுக்கு எச்சரிக்கையாயும் அவரது கச்சத்தீவு பயணம் அமைந்தது. 

ஒடுக்கும் இனவாதம் அதுவும்  ஈழத் தமிழரின் கச்சதீவு மண்ணில் நின்று  தன்னை நுணுக்கமாகக் கட்டமைக்கிறது. ஆனால் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனம்  தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் நேரமெல்லாம் தம்மைத் தாமே சிதறு தேங்காயாய் அடித்துக்கொள்கிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் நகர்வுகள் என்ன. ஏன் தமிழ்நாட்டில் கூட பலமற்று இருக்கிறது. சிங்கள இனவாதிகளை விட ஏன் பலமற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் தமிழ்த்தேசிய இனத்தின் பலத்தை எவ்வாறு பெருக்குவது என்பதை யோசித்து செயல்படுவது எல்லாம் நம் தேசியவாதத்தை வளர்த்தெடுக்கும் முக்கிய விடயங்களாகும்.

இத்தகைய இழிநிலையிருந்து மீண்டெழுந்து  தமிழீழத்  தேசியத்தை  இன்றைய புதிய சூழலுக்குப் பொருத்தமாக புதிய வகையில் கட்டி எழுப்பத் தொடங்க வேண்டும். அதற்கு உள்ளும், புறமும் மேற்சொன்னது போன்ற புதிய கட்டமைப்புக்களை முற்றிலும் அறிவார்ந்த வகையில் வடிவமைக்க வேண்டும். அவ்வாறு கட்டமைக்கப்படும் தமிழீழத் தேசியம் நம்மை வலுவான வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

 

நன்றி 

அதிகம் பார்க்கப்பட்டவை: