Suresh Sallay கைது - கோட்டாபயவின் அறியப்படாத மறைக்கப்பட்ட பக்கங்கள் | ஊடறுப்பு (Udaruppu) இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணல். 27-02-2026
ஈழத்தைச் சார்ந்த ஆய்வாளரும், யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழீழம், புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச அரசியலை தொடர்ந்து ஆய்ந்துவருபவரும், உலக வரலாற்று-அரசியல் அறிவியலை ஆய்வு செய்வதை தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருப்பவரும், பல அரசியல்-வரலாற்று நூல்களின் ஆசிரியருமான திரு. மு.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைகள், உரைகள், காணொலிகள் இத்தளத்தில் இடம்பெறுகின்றன.
சனி, 28 பிப்ரவரி, 2026
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026
ஈழப்பிரச்சினையில் நடுவராக ஸ்விஸ் நாடு. அநுரா செய்யவேண்டிய 3 முடிவுகள். அழிந்த தமிழ் தலைமைகள்.
சமீபத்தில் ஈழத் தமிழருக்கிடையேயான ஒற்றுமையின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஸ்விஸ் நாடு முயல்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் தூதுவர் இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
உண்மையில் எங்கோ இருக்கும் ஸ்விஸ் நாடு இலங்கையில் உள்ள ஈழப் பிரச்சனையை அனுக வேண்டிய காரணம் என்ன. இதனால் ஈழத்தமிழருக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார் வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
ஊடறுப்பு தளத்தின் நெறியாளர் தமிழரசுவுக்கு தந்த நேர்காணலில் இலங்கை அரசின் இந்த புதிய நகர்வு குறித்தும், ஈழப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் மு.திருநாவுக்கரசு அவர்கள் அளித்த நேர்காணல் கீழே..
நேர்காணல் காணொளி:
ஈழப் பிரச்சனையை சிங்களர்கள் தமிழின அழிப்பு, இந்திய எதிர்ப்பு என்கிற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே பார்க்கிறார்கள். இந்திய எதிர்ப்பை பலப்படுத்த ஒரே வழி இலங்கையில் தமிழினத்தை அழிப்பதுவே. இதுவே சிங்களர்களின் இந்திய ஆதிக்க எதிர்ப்பு வாதமுமாகும்.
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
ரணில் - மோடி 2023 ஒப்பந்தமும் இந்தியா - இலங்கை கடல்வழிப் பாலமும்.
ரணில் - மோடி 2023 வரலாற்று ஒப்பந்தம் தகர்ப்பு. ஏன் ? மு.திருநாவுக்கரசு அவர்களின் நேர்காணல். 07.02.2026.
ஊடறுப்பு செய்தித் தளத்திற்காக வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் லங்காஸ்ரீ ஊடகவியலாளர் தமிழரசு அவர்களுக்கு வழங்கிய இணைய நேர்காணல். 07.02.2026.
பொருளாதார தொலைநோக்கு: நீண்ட காலப் பொருளாதாரக் கூட்டாண்மை, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- எரிசக்தி இணைப்பு: இரு நாடுகளின் மின்சாரக் கட்டமைப்பு (Electricity Grid) மற்றும் திருகோணமலை எரிசக்தி மையத்தை மேம்படுத்துதல்.
- நிலப் பாலம் (Land Bridge): இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் நிலப் பாதையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புதல்.
- டிஜிட்டல் மற்றும் வர்த்தக பரிவர்த்தனை: இந்திய ரூபாய் (INR) மூலம் வர்த்தகம் மற்றும் UPI அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்துதல்.
- எரிபொருள் குழாய்: இலங்கைக்கு எரிபொருள் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் feasibility study.
- பாதுகாப்பு மற்றும் இணைப்பு: கடல்சார், வான்வழி மற்றும் துறைமுக இணைப்பு (திருகோணமலை, கொழும்பு) மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல்.
இந்த ஒப்பந்தத்தி்ல் வழக்கமான இரு நாடுகளிடையேயான பொருளாதார, தொழில் அபிவிருத்தி போன்றவை பேசப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானது இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கை மன்னாருக்குமிடையே கடல் மேல் ஒரு தரைவழிப் போக்குவரத்து பாலம் அமைப்பது என்பதாகும். இந்தப் பாலத்தின் நீளம் கடல்வழியே வெறும் 23 கி.மீ நீளமேயாகும்.
அதனாலேயே 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கையின் இடதுசாரி அதிபர் என வர்ணிக்கப்படும் அநுரா திசநாயகே இந்தியா - இலங்கை இடையேயான தரைவழிப் போக்குவரத்து பாலம் என்பது சாத்தியமில்லாதது என்று அதை நிராகரித்துச் சென்றுவிட்டார்.
சாத்தியமில்லை என்பதை வரலாற்று அரசியல் நிகழ்வுகளின் ,பின்னணிகளின் ஊடே விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
இருப்பதிலிருந்து மாற்றி இந்தியாவின் ஒரு இணைப்புப் பகுதியாக மாறுவதை நோக்கி
கொண்டு செல்லும் என்றும், ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களை விடவும் அதிகாரம்
பெறுவார்கள் என்றும் சிங்களர்கள் உள்ளூர அச்சப்படுகிறார்கள். தமிழர்கள் இலங்கையின் வடபகுதியிலும்
இந்தியாவின் தென்முனையிலும் வாழ்வதால் ஈழத் தமிழர் மீதான, இந்தியா மீதான
அச்சம் சிங்களருக்கு வரலாற்று ரீதியாக மகாவம்ச காலத்தில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்தியாவின் வரலாற்று மனோபாவமும் இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள
ஒரு சிறு தீவு என்றே கருதி வந்திருக்கிறது. சிந்து நதியில் ஆரம்பித்து இலங்கை வரை இந்தியாவின்
நீட்சி என்ற கருத்திலேயே சிங்களத்தீவிற்கொரு பாலம் அமைப்போம்என்று பாரதியாரே பாடியிருப்பதில் இருந்து இதை உணரலாம்.
அறிக்கைகளின்படி, ராமேஸ்வரத்தையும் (இந்தியா) தலைமன்னாரையும் (இலங்கை) இணைக்கும்
முன்மொழியப்பட்ட சாலை மற்றும் ரயில் பாலத் திட்டத்திற்கு தோராயமாக 5 பில்லியன் டாலர்
(சுமார் ₹24,000 கோடி முதல் ₹40,000 கோடிக்கும் மேல்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இத்திட்டங்களுக்கு நிதியளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும்,
இந்தத் திட்டம் நிதி உதவிக்காகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டின் முந்தைய
அறிக்கைகள், ஆசிய வளர்ச்சி வங்கி 3.5 பில்லியன் டாலர் (₹220 பில்லியன்) நிதியுதவி அளிப்பதாக
உறுதியளித்திருந்ததாகத் தெரிவித்தன.
இந்தியாவை கைகழுவி தோல்வியுறச் செய்த இலங்கை சிங்கள அரசுகள் இந்த இணைப்புப்
பாலத்தை ஒருபோதும் நிறைவேற்றாது. ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் பகுதிகள்
முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டு தமிழர்கள் தடயமின்றி அங்கே அழிக்கப்பட்டால்
அது நிரந்தரமாக சாத்தியப்படாமலே போய்விடும். தனித்த சிங்கள நாடு என்கிற தாங்கள்
உருவாக்கிவரும் அடையாளத்தை பேணவே சிங்களர் விரும்புவர். அப்படிப்பட்ட சிங்கள இனமயமாக்கல்
மூலம் தமிழரை அழிப்பது தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில்
நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை தமிழீழம் அமைந்தால் அது தமிழீழத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான
பாலமாகத் தான் அமைய முடியுமே தவிர சிங்கள இனவாத இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடையே இப்படி ஒரு பாலம் அமையவே முடியாது.
இலங்கை அரசுகளின் இந்த இந்திய எதிர்ப்பு வாதத்தை தெளிவாக விவரிக்கிறார்
இந்த காணொளியில்.
திங்கள், 2 பிப்ரவரி, 2026
ஒற்றை மைய உலக ஒழுங்கு சீர்குலையும் காலத்தில் வல்லரசுகளின் புதிய ஆதிக்க குவிமையங்கள்.
லங்கா ஸ்ரீ பத்திரிக்கையின் ஊடறுப்பு நிகழ்வில், ஈழத்தைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் திரு மு.திருநாவுக்கரசு அவர்கள், நெறியாளர் தமிழரசுவுக்கு, 31-01-2026 அன்று வழங்கிய நேர்காணல்.
லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் முதல் பகுதி:
இந்த நேர்காணல்களில் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள் சில சுருக்கமாக கீழே...
- இந்த 2026ல் உலக ஒழுங்கு குலைந்திருக்கிறது. ஆனால் புதிய உலக ஒழுங்கு இன்னும் உருவாகவில்லை.
- America First என்கிற அமெரிக்காவின் தன்னை முன்னிலைப்படுத்தும் கருதுகோள் சிக்கலுக்கு உள்ளாகிறது.
- இந்த சீர்குலையும் உலக ஒழுங்கு சூழலில், இரு பெரும் நாடுகள் அல்லது நாட்டு அணிகளுக்கு இடையிலான பெரும்போர் தான் புதிய உலக ஒழுங்கை உருவாக்கக் கூடிய பலத்தை அப்போரில் வெற்றி பெறும் நாட்டிற்கு அல்லது வெற்றி பெறும் அணிக்கு வழங்கும். ஆனால் இத்தகைய சூழல் நடக்காததால் உலக ஒழுங்கை அமெரிக்காவால் மாற்ற முடியாது.
- சீர்குலையும் உலக ஒழுங்கில் சந்தைக்கான போட்டியில் அமெரிக்காவிற்கு சவாலாக இருப்பது சீனாவே. அமெரிக்கா ஏகாதிபத்தியம் கம்பெனிகளின் monoploy ஆக இருக்கிறது. சீனா அரசு சார்ந்த(state sponsored), சந்தை ஏகாதிபத்தியமாக, monoopoly ஆக இருக்கிறது. எனவே சீனாவின் பலம் அதிகமாக இருக்கும்.
- சீனா கடந்த 25 ஆணடுகளாக தொழில்நுட்பத்தை மேற்குலகிடமிருந்து பெற்றுக் கொள்ள தனது சந்தையை திறந்து விட்டது சீனா மற்றும் ரஷ்யா. சீனா உலக தொழில்நுட்பம் அனைத்தையும் பெற்று இன்று மிதமிஞ்சிய வளர்ச்சியடைந்து விட்டது.
- 45 வருட தொழில்நுட்பமயமாக்கப்பட்ட உற்பத்தியால், மாசுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலால் ஆர்க்டிக் கடல் உருகுகிறது. அது புதிய எளிதான கடல்வழிப்பாதையை உலக வர்த்தகத்திற்கு ஏற்படுத்துகிறது. இதைப் பயன்படுத்தி சீனா தனது உற்பத்திப் பொருட்களை மேற்குலகம், கனடா மற்றும் உலகநாடுகள் அனைத்திற்கும் கொண்டு செல்வது இன்னும் எளிதாகிறது. எனவே தான் இந்தப் பாதையில் இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயல்கிறது. சீனாவின் எளிய கடல்வழிப் பாதையை தனது கட்டுக்குள் வைக்க முயல்கிறது.
- முதலாம் , இரண்டாம் உலகப் போர்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையேயான போர்கள் அல்ல. வளர்ச்சியடைந்த முதலாளிகளிடையே நடந்த பன்னாட்டு சந்தைப் பிடிப்பின் போட்டியால் நடந்த போர்களே ஆகும். முதலாளி வர்க்கம் என்கிற ஒரே வர்க்கத்துக்குள்ளேயே நடந்த முரண்களே இந்தப் போர்கள் ஆகும்.
- அமெரிக்கா ஈரானுடன் நேரடியாக போரில் இறங்கும் வாய்ப்பு குறைவு. ஈரான் மேல தாக்குதல்கள் செய்யலாம். தலைவர்களை கொல்லலாம். உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால் நேரடியாக போரில் இறங்குவது சரியான அமெரிக்காவின் முடிவல்ல. தேவையுமல்ல.
- இன்றைய உலக ஏகாதிபத்திய சந்தைப் போட்டியில் கிரீன்லாந்து, வெனிசூலா மற்றும் இலங்கை ஆகிய போட்டிக்கான குவிமையங்கள் உள்ளன.
- தந்தை செல்வா காலம் முதலே தமிழர்கள் சுயாட்சி என்பதை அடைய முடியாமலே சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தொடர்ந்து தோல்வியடைந்தே வந்துள்ளனர். ஒரு தலைவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியலை வெற்றிகரமாக புரிந்து உலக அரசியலை செய்ததில்லை.
- பாக் நீரிணை தமிழரின் கட்டுப்பாட்டில் இருந்தவரை ஈழப் போராட்டம் வென்றது. பாக் நீரிணை தமிழரை விட்டுப் போனபின்பு ஈழப் போராட்டம் எளிதில் அழிக்கப்பட்டது.
- இந்திராகாந்தி காலத்தில் 1984ல் இந்திரா-பார்த்தசாரதி தீர்வு ஒன்று திட்டமிடப்பட்டது. கிரேக்க-துருக்கி தீர்வு போல, ஒரு நாடு - இரு அரசுகள் என்கிற அமைப்பை உருவாக்க தமிழர் பகுதியில் படையை இறக்கி இந்தியப் படை தமிழர் பகுதியை ஆளும் என்றும், சிங்களர் பகுதியை சிங்களர் ஆளட்டும் என்றும் திட்டமிடப்பட்டது. அது நிறைவேற்றப்படுவதற்குள் இந்திராகாந்தி கொல்லப்பட்டார்.
மேலேயுள்ள இரண்டு பாகங்களின் தொகுப்பு :
உலக ஒழுங்கு சீர்குலையும் காலத்தில் வல்லரசுகளின் புதிய ஆதிக்க குவிமையங்கள். நேர்காணல்
அதிகம் பார்க்கப்பட்டவை:
-
ஜனவரி 17, 2025. இலக்கு மின்னிதழில் வெளிவரும் மு.திருநாவுக்கரசு அவர்களின் அரசியல் கட்டுரையின் ஒலிவடிவங்கள். . இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப...
-
1983 ல் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, ஈழத்தமிழர் மீது நடத்தப்பட்ட யூலைக் கலவர...
-
30/10/2025. மு . திருநாவுக்கரசு பலமான ஒரு அர சின் நேரடி ஆதரவின்றி , தேசிய இன விடுதலை சாத்தியமற்றது . உள்நாட்டுக் கொள்கை...
-
பயணம் செய்ய இலக்கு வேண்டும். பறப்பதற்கு சிறகுகள் வேண்டும். கொடி உயரக் கொழுகொம்பு வேண்டும். படகு பிழை என்பதற்காக பயணம் தவறில்லை. படகு பிழை என...
-
24/9/2025 நாம் பேசுவது தத்துவங்கள் பற்றியா , சம்பவங்கள் பற்றியா அல்லது மனிதர்கள் பற்றியா . "Strong minds discuss ideas ...


