30/10/2025.
மு.திருநாவுக்கரசு
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசியஇன விடுதலை சாத்தியமற்றது.
உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியே வெளியுறவுக் கொள்கை
யாரைப் பகைவராக்கக் கூடாது என்பதை முதன்மையாக கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டமானது அடிப்படையில் சர்வதேசப் பண்பையும், பரிமாணத்தையும் கொண்டது.
சர்வதேச உறவு என்பது தங்கத் தாம்பாளத்தில் நீட்டப்படும் தேனும் பாலுமல்ல. அது நாடுகள் தத்தம் நலன் சார் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் என்ற வடிவில்
இரத்தமும், தசையுமான ஒரு பதநீர்.
நீட்சியே" என்ற கருத்தும் கவனத்திற்குரியது. அதாவது, உள்நாட்டில் ஒடுக்குமுறையைச் செய்யும் ஓர் அரசு, அதற்குப் பொருத்தமாகவோ அல்லது இசைவாகவோதான் வெளிநாட்டுக் கொள்கைகளை, உறவுகளை வகுத்து வைத்திருக்கும்.
மேற்படி இவை பற்றிய ஞானங்களுக்கு உட்பட்டதே அல்லது கீழ்ப்பட்டதேதான் வெளியுறவு கொள்கை.
அரசற்ற, தேசிய விடுதலைப் போராட்ட வரலாறுகளின் யதார்த்தம்
அரசற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் சம்பந்தமாக உலகம் தழுவிய நீண்ட வரலாறானது நம் உச்சந் தலையில் அடித்துச் சொல்வது என்னவெனில்,
பலம் பொருந்திய ஒரு வெளிநாட்டின் வெளிப்படையான நேரடி ஆதரவும் உதவியுமின்றி, எந்தவொரு தேசிய இனமும் விடுதலை அடைய முடியாது என்பதே.
"சொந்தக் காலில் நின்று, சொந்தப் பலத்தில் நின்று போராடுவோம்" என்று கூறப்படும், ஒரு கவிஞனின் நாடகப் பாடல் போன்ற வரிகள் எல்லாம் ரசிகனுக்கு சொர்க்கத்தைத் தரலாம். ஆனால் இன விடுதலைக்கு அது புதைகுழியைத்தான் தரும்.
பலம் பொருந்திய ஒரு வெளிநாட்டின் வெளிப்படையான நேரடி ஆதரவும்
"சொந்தக் காலில் நின்று, சொந்தப் பலத்தில் நின்று போராடுவோம்" என்று கூறப்படும், ஒரு கவிஞனின் நாடகப் பாடல் போன்ற வரிகள் எல்லாம் ரசிகனுக்கு சொர்க்கத்தைத் தரலாம். ஆனால் இன விடுதலைக்கு அது புதைகுழியைத்தான் தரும்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல்
இத்தகைய பலம் வாய்ந்த வெளியுறவு நாடுகளின் உறவின்றி 54 கோடி இஸ்லாமியர்களை, இஸ்லாமிய அரசுகளை, இஸ்ரேலால் எளிதாக கையாண்டுவிட முடியாது.
என்பதே நம் முகத்தில் அறையப்படும் உண்மையாகும்.
ஈழத்தமிழரின் போதாமை
கடந்த 16 ஆண்டுகளாகத் தமக்கு நேர்ந்த இனப்படுகொலை குறித்து ஈழத்தமிழர் ஐ.நா நோக்கி அல்லது மனித உரிமை ஆணையத்தின் முன் தொடர்ந்து காவடியாடினாலும், ஒவ்வொரு வருடமும் காவடியாட்டம் முடிந்த பின்பு ஒப்பாரி ஆறாய்ப் பாய்வதைத் தவிர பால் செம்பு கூட மிஞ்சுவதில்லை.
இஸ்ரேலுக்குக் கிடைக்கிறது.
பங்களாதேஸ் - தைவான் - ரஷ்யா - யூகோஸ்லாவிய உதாரணங்கள்
குறைந்தபட்சம் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்பு விடுதலையடைந்த அரசற்றதேசிய இனங்களை எடுத்துக் கொண்டால்,
சோவியத் யூனியனுடனான இந்திய அரசின் நேரடித் தலையீட்டினால்தான் பங்களாதேஸ் விடுதலையடைத்தது. அதுவும் 30 லட்சம் வங்காள மக்கள் படுகொலைக்குள்ளான பின்னணியில் தான் நிகழ்ந்தது.
இன்றுவரை, கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேலாய், மிகப்பெரும் வல்லரசான சீனாவால், குட்டி நாடு தாய்வானை ஆக்கிரமிக்க முடியாமல் போயிருப்பதற்குக் காரணம்
தாய்வான் மேற்கொள்ளும் அமெரிக்க - ஜப்பானிய சார்பு உறவுகளே.
இறுதியாக அங்கே நடந்த இனப்படுகொலைகளுக்குக் காரணமான சனாதிபதி
மிலோசவிக், அமெரிக்க ஆதரவுடன் கைது செய்யப்பட்டு, சர்வதேச விசாரணைக் கைதியாய் சிறையில் உயிர் நீத்தார்.
திபெத்திய விடுதலை
திபேத்தின் சிக்கலான புவியியல் அமைவிடம் காரணமாக மலைவாழ் திபேத்தியர்களை பாதுகாக்க முடியாதென்ற காரணத்தினாலும், சீனாவுடனான சந்தை வாய்ப்பை மனதிற் கொண்டும் அமெரிக்காவால் திபேத்தியர்களுக்கான தார்மீக ஆதரவைத் தவிர வேறு எதனையும் செய்ய முடியவில்லை.
குர்தீஸ் இன விடுதலைப் போராட்டம்
இஸ்லாமியர்களாகவே இருந்த போதிலும், ஒடுக்கும் இஸ்லாமிய ஈராக்கிய அரசுக்கு எதிராக, போராடிய குர்திஸ் மக்களுக்கு இஸ்லாமிய நாடுகள் எதுவுமே ஆதரவளிக்காத நிலையில், குர்தீஸ் இனமக்கள் பாரிய இனப்படுகொலைக்கு ஆளானார்கள். யாரும் உதவிக்கு வராத இந்தப் பின்னணியில், உதவிக் கரம் நீட்டிய அமெரிக்காவின் ஆதரவை குர்தீஸ் மக்கள் இறுகப் பற்றிப் பிடித்ததனர்.
சதாம் உசைனை வீழ்த்துவதற்கும், மேற்காசியாவில் இஸ்லாமிய மக்கள் கூட்டம் ஓன்றின் ஆதரவைத் தான் பெறுவதற்கும் வாய்ப்பாக ஈராக்கிய குர்திஸ் இன மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது.
ஆனாலும் ரஷ்யாவுக்கு எதிராக தனது படைத்தளத்தை துருக்கியில் கொண்டுள்ள அமெரிக்கா, தனது நேட்டோ நண்பனான துருக்கியைப் பகைக்க கூடாது என்பதற்காக, குர்திஸ் மக்கள் விடுதலையடைந்து தனித்த சுதந்திர அரசையமைக்கும் கோரிக்கையை மறுத்தது.
எனவே அமெரிக்கா, சிறிது மட்டுப்படுத்தப்பட்ட வகையில், தனக்குப்
பொருத்தமானதும் அங்குள்ள குருதிஸ் மக்களுக்கு ஓரளவு ஆதரவளிக்க கூடியதுமானநிலைப்பாட்டை, ஒரு சமஸ்டித் தீர்வாக முன்னெடுத்தது.
இப்பின்னணியில், அமெரிக்க ஆதரவுடன், குறைந்தபட்சம் அமெரிக்கா நீட்டும் சமஸ்டித் தீர்வுஒன்றைப் பெறுவதைத் தவிர, ஈராக்கிய குருதிஸ் இன மக்களுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை.
"பசித்திருப்பதில் கஞ்சி மேல்" என்ற அடிப்படையில் சோறு இல்லாட்டாலும் கஞ்சியென்ற வகையில், அமெரிக்க ஆதரவுடன் குர்திஸ் இன மக்கள் ஒரு சமஸ்டி ஆட்சி அலகைப் பெறத் தலைப்பட்டனர்.
இனப்படுகொலையா ஏகாதிபத்தியமா,எது அதிகம் ஆபத்தானது என்று
நோக்குகையில், படுகொலையே அதிகம் ஆபத்தானது மற்றும் உடனே தடுக்கப்பட வேண்டியது என்ற யதார்த்தபூர்வ நோக்கு நிலையில் இருந்து, குருதிஸ் மக்கள் ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தனர். இதனையே இன ஒடுக்குமுறைக்கும், இனப் படுகொலைகளுக்கும் உள்ளான யூகோஸ்லாவியா வாழ் தேசிய இனங்களும் தங்கள் அனுகுமுறையாக எடுத்துக்கொண்டன.
எனவே அரசற்ற ஒரு தேசிய இனம் ஒரு பலமான வெளியரசின் ஆதரவின்றித் தனித்து தனக்கான இலக்கையடைய முடியாதென்பது ஒரு புறமிருக்க, அத்தகைய வெளியரசுகளும் தாம் ஆதரவளிக்கக்கூடிய மக்களுக்கான புவியியல் அரசியற் சூழல், அந்த வெளியரசுக்குப் பொருத்தமானதாக,தேவையானதாக இல்லாது விட்டால் அத்தகைய வெளியரசுகளின் ஆதரவையும் பெற முடியாது. இதற்கு திபெத் ஒருமுனை உதாரணம். குர்திஸ் இன்னொரு முனை உதாரணம்.
வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்போம்
புவியியல் மற்றும் அரசியற் சூழலியல் என்பனவற்றின் பின்னணியில், அரசுகளின் நலன் சார்ந்த கொடுக்கல் வாங்கல் என்ற அடிப்படையில் நின்று மட்டுமேவெளியுறவுக் கொள்கையை வகுக்கவும், கடைபிடிக்கவும் முடியும்.
காணப்படும் உயிருள்ள யதார்த்தத்தைப் பற்றிய சரியான அறிவும், நடைமுறைக்குப் பொருத்தமான கொள்கையும் இல்லாமல் எந்தவொரு அரசற்ற தேசிய இனமும் ஒருபோதும் விடுதலையடைய முடியாது.
இதில் கற்பனைகளும், தூய்மை வாதங்களும், முற்கற்பிதங்களும் பார்வைக்கு வசீகரமாகவும் மனதிற்கு இனிதாகவும் இருக்கலாமே தவிர , நடைமுறையில் அவற்றால் புதை குழிகளைத் தவிர வேறொன்றையும் தர இயலாது .
ஜேர்மானியத் தத்துவஞானி ஹெகல் கூறுவது பின்வருமாறு,
"கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் நாம் வரலாற்றிலிருந்து எதனையும் கற்பதில்லை என்பதுதான் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.
" ("The only thing we learn from history is that we learn nothing from history". -- G.H. F. Hegel)
வரலாறு என்பது மனித நடத்தையை, நடைமுறையில் பரிசோதித்து அறிவதற்கான ஒரு ஆய்வுக்கூடம்.அந்த வரலாற்று அறிவிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும் பாடங்களையும் படிப்பினைகளையும் பெறத் தவறினால், நச்சுக்கனிகளைத் தவிர வேறு எதனையும் பெறமுடியாது.
அரசியல் பற்றியும், கொள்கை வகுப்பு மற்றும் நடைமுறை சம்பந்தமாகவும் ஜெர்மனியின் பிஸ்மாக் கூறிய பின்வரும் கூற்றும் கவனத்திற்குரியது.
"Politics is the art of the possible, the attainable — the art of the next best".
-- Otto Von Bismarck.
காணப்படுவனவற்றுள் அடுத்து ஆகச் சிறந்ததாக காணப்படுவது எது என்பதைக் கண்டறிந்து, அதை முன்னெடுக்கும் வித்தை."
பிராணி இயல் கூறும் கவனத்துக்குரிய உண்மை என்னவெனில்:
நடுத்தர அளவுக்கு மேல் வளர்ந்த ஓர் உடும்பை நரியால் வேட்டையாட முடியாது. ஆனால், பெரிய உடும்பே ஆயினும் அது பொந்தினுட் தலையை ஒட்டிவிட்டு எதிரிக்குத் தெரியாதவாறு தன் உடம்பு முழுவதும் மறைந்து விட்டது என்று ஆறுதல் அடையும் ஓர் உடும்பை நரியால் இலகுவாக வேட்டையாடி உண்டு களிக்க முடியும்.
இவ்வாறு தலையைப் பொந்தினுள் ஓட்டிவிட்டு, உடம்பை எதிரிக்குக் காட்டிக் கொண்டிருக்கும் உடும்பும், கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் பூனைக் குட்டியும் போல், நம் அரசியல் நோக்கு நிலை இருக்கக் கூடாது.
காணப்படும் யதார்த்தத்தை, காலங்களை முன்னோக்கியும், பின்னோக்கியும் பார்க்க வேண்டும். அத்தகைய பார்வை உள்ளவர்களிடம் எதிர்காலம் பற்றிய துல்லியமான தீர்க்கதரிசனம் தோன்றும்.
அந்தத் தீர்க்க தரிசன ஒளியில் அதைச் சார்ந்த மக்கள் கூட்டம் ஒளிரும் , மிளிரும்.
---------- ********** ---------- ********** ----------
இக்கட்டுரை தமிழ்வின் இணையதளத்தில் நவம்பர் 1, 2025 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.
https://tamilwin.com/article/sri-lankan-tamils-government-political-article-1762008060

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக