வரலாற்றில், இந்தியா துரத்திய அதிகார பௌத்தம், இலங்கையில், தன் இந்திய எதிர்ப்பால் தமிழரை அழிக்கிறது
என்கிற தலைப்பில்
நிலவரம் தொலைக்காட்சிக்கு வரலாற்று ஆய்வாளர், அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய நேர்காணல்.
யூட்யூப் காணொலி:
ஈழத்தைச் சார்ந்த ஆய்வாளரும், யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழீழம், புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச அரசியலை தொடர்ந்து ஆய்ந்துவருபவரும், உலக வரலாற்று-அரசியல் அறிவியலை ஆய்வு செய்வதை தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருப்பவரும், பல அரசியல்-வரலாற்று நூல்களின் ஆசிரியருமான திரு. மு.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைகள், உரைகள், காணொலிகள் இத்தளத்தில் இடம்பெறுகின்றன.
வரலாற்றில், இந்தியா துரத்திய அதிகார பௌத்தம், இலங்கையில், தன் இந்திய எதிர்ப்பால் தமிழரை அழிக்கிறது
என்கிற தலைப்பில்
நிலவரம் தொலைக்காட்சிக்கு வரலாற்று ஆய்வாளர், அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய நேர்காணல்.
யூட்யூப் காணொலி:
இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே பிடி மாகாண சபை அமைப்புகள் தான். அதை நீக்கினால் இந்தியா தீவிரமாகும் என்பதால் அதை நீக்காமலே டம்மியாக வைத்திருந்து மேலும் அதை பலனற்ற ஒரு அமைப்பாக நீர்த்துப் போகச் செய்யவே முயலுவார்கள்.
இப்படியான சிந்தனை சீனாவிடமிருந்து தான் இலங்கை அரசுக்கு தரப்படுகிறது. சீனா தேசிய இனங்களின் உரிமைகளை எப்போதுமே சமமாக மதித்ததில்லை. தனது நாட்டிலேயே அது அவர்களை சீன கட்சிக்கு கட்டுப்பட்ட சில உரிமைகளை கெஞ்சி கேட்டுக்கொள்ளும் அளவிலேயே தான் வைத்திருக்கிறது. அதையே இலங்கையிலும் சிறுபான்மை தேசிய இனங்கள் மேலும் பயன்படுத்த சிங்கள அரசுக்கு சீனா ஆலோசனையும் உதவியும் செய்கிறது.
1984 இந்தியா இலங்கை ஒப்பந்தம், பார்த்தசாரதியால் துருக்கி-கிரேக்கம்-சைப்ரஸ் ஸ்டைல் தீர்வை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டது. துருக்கி ராணுவம் கிரேக்கத்தில் உள்ள 20 சதவீத துருக்கியரை கிரேக்கர்கள் துன்புறுத்துவதை படுகொலை செய்வதை தடுக்கும் விதமாக கிரேக்கத்தில் இறங்கி துருக்கியரை பாதுகாத்தது. இன்றுவரை அந்த ராணுவம் கிரேக்கத்தில் இருக்கிறது. இந்திராகாந்தி படுகொலைக்குப் பின்பு அனைத்தும் மாற்றப்பட்டு தலைகீழாக யோசிப்பவர்கள் அங்கே வந்ததால் அது கைவிடப்பட்டுவிட்டது.
இந்திய கொள்கை வகுப்பாளர்கள் யாரிடமும் தற்போது இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு தமிழர்களை காப்பது என்பதே கிடையாது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் கடல் பகுதி சார்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இல்லை. நேரு - பணிக்கர் காலத்தில் துவங்கி அவ்வாறு தான் இருந்தது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் கொண்ட கடல்சார் வெளியுறவுக் கொள்கைகளே இந்தியாவுக்கு தேவையான வெளியுறவுக் கொள்கையின் முன்மாதிரியாகும். ஆனால் இன்றுவரை அதுபற்றி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவே இல்லை.
ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவிட்டால் பாக் நீரிணை சீனாவின் வசமாகிவிடும். அப்படி நிகழும்போது அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்தியாவை இரண்டு மூன்று துண்டுகளாக உடைக்கும் நகர்வுகளை சீனாவால் நிறைவேற்ற முடியும்.